மேடையில் இருந்த வில் ஸ்மித்.. பிராவை கழட்டி வீசிய ரசிகை.. அடுத்து என்ன நடந்துச்சுனு பாருங்க!
அமெரிக்கா: ஹாலிவுட் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ராப்பர் வில் ஸ்மித். இவர் அண்மையில் அரங்கேற்றிய கச்சேரி ஒன்றின் போது நடந்த சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது அவர் மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த வேளையில் அரங்கேறியது. அதாவது ரசிகர்கள் மத்தியில் இருந்து மேடை மீது வீசப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளாடை வில் ஸ்மித்தை மட்டும் இல்லாமல் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக மேடைக் கச்சேரி போது, கலைஞர்கள் மீது பாட்டில்கள் வீசப்படுவது சாதாரணம் என்றாலும், அவ்வப்போது செருப்புகள் கூட வீசப்பட்டுள்ளன. நடிகர் விஜய் கட்சி தொடங்கி தனது கட்சி நிகழ்ச்சிகளுக்காக வெளியில் வரும்போது, அவரது கட்சித் தொண்டர்கள் விஜய் மீது தங்களின் கட்சித் துண்டை வீசுகிறர்கள். அதை விஜய்யும் எடுத்து தனது தோளில் போட்டுக் கொள்கிறார். அவரும் தனது தொண்டர்களை நோக்கி கட்சித் துண்டுகளை வீசுவதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் வில் ஸ்மித் விவகாரத்தில் நடந்தது அப்படி இல்லை. அந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வில் ஸ்மித் மேடையில் தனது குழுவுடன் ராப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து ஒரு பெண்ணின் உள்ளாடை மேடை மீது வீசப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத வில் ஸ்மித், முதலில் சற்று திகைத்தாலும், தொடர்ந்து பாடிக் கொண்டு இருந்தார்.

உள்ளாடை: நிகழ்ச்சி முடிந்ததும், வில் ஸ்மித் அந்த உள்ளாடையை மேடையில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். இந்தக் காட்சியைப் பார்த்த அவரும், அவருடன் இருந்தவர்களும் சிரிக்கத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோவை வில் ஸ்மித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "இந்த ஆதரவை நான் பாராட்டுகிறேன்" என்று கேப்ஷனும் இட்டுள்ளார். இந்த வீடியோவும், அவரது பதிவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரசிகர்கள் கமெண்ட்: வில் ஸ்மித் பகிர்ந்த அந்த வீடியோவைப் பார்த்த பலர், "உங்கள் கேப்ஷன் அசத்தலாக உள்ளது", "இது ஒரு மறக்க முடியாத தருணம்! அற்புதமான கச்சேரி, இந்த உற்சாகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி!" எனப் பாராட்டி கமெண்ட் பதிவிட்டுள்ளார்கள். வில் ஸ்மித்க்கு இது போன்ற சர்ச்சை சம்பவங்கள் எதுவும் புதிதல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் கொடுத்த அறை சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அவரது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடியைப் பற்றி, ஆஸ்கார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்த கிறிஸ் ராக் கேலி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் படத்தில்: தற்போது, வில் ஸ்மித் தென்னிந்திய திரைப்படத் துறையில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள பிரம்மாண்ட சயின்ஸ்-ஃபிக்ஷன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக வில் ஸ்மித் மற்றும் டுவைன் ஜான்சன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அட்லீ இயக்கத்தில் வில் ஸ்மித் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனவும் பலர் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











