இறந்த அப்பாவின் போட்டோவோடு படையப்பா ரீ ரிலீஸ்க்குச் சென்ற மகள்.. என்னங்க அழ வைக்கறீங்க!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளில் ரீ ரிலீஸ் செய்தனர். இப்படி இருக்கும்போது படத்தை பார்க்க ரசிகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரசிகை ஒருவர் படையப்பா படத்தை பார்க்க தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது மறைந்த தனது அப்பாவின் புகைப்படத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருவது மட்டும் இல்லாமல் ரசிகர்களை கண் கலங்கவும் வைத்துள்ளது.
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினிகாந்த் தான். ஐந்து தலைமுறை ரசிகர்களை திருப்தி படுத்திய நடிகர். இன்னும் அதே ஸ்டைல், அதே மாஸ் உடன் திரை உலகை ஆண்டு வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். தமிழர்கள் பரவி வாழும் நாடுகளில் தமிழர்களும் தமிழர் அல்லாதோரும் கூட இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் இவருக்கு ரசிகர் மன்றங்களும் உள்ளது.

படையப்பா ரீ ரிலீஸ்: இப்படியான சூப்பர் ஸ்டாரின் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் புது படத்துக்கு எப்படி ஓபனிங் கொடுப்பார்களோ அதேபோலத்தான் கொடுத்து வரவேற்றார்கள். படத்தை பெரிய திரையில் மீண்டும் பார்க்கும்போது மிகவும் சிறப்பாக இருந்தது. பலரும் அவர்களின் சிறு வயது மற்றும் இளமைக்கால நினைவுகளை மீண்டும் தூண்டிவிட்டுவிட்டது.
இறந்த அப்பாவுடன் படையப்பா: இந்நிலையில் ரசிகை ஒருவர், நான் இப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படையப்பா படத்தை பார்க்கப் போய்க்கொண்டு இருக்கிறேன். கையில் இருப்பது எனது அப்பாவின் புகைப்படம். அவர் மறைந்துவிட்டார். எனது அப்பா மிகவும் தீவிரமான ரஜினி ரசிகர். அதனால் எனது அப்பாவின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சென்று, அவருடன் படையப்பா படத்தை பார்க்கபோகிறேன்" என்று பேசியுள்ளார். மேலும் தனது அப்பாவின் புகைப்படத்திற்கு என்று தனி இருக்கையையும் புக் செய்து, அதில் வைத்து படம் பார்த்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவுவது மட்டும் இல்லாமல், பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
வசூல் சாதனை: படையப்பா படம் உருவாக்கப்பட்டபோது ரூபாய் 5 .75 கோடிகள் பட்ஜெட்டில்தான் மொத்த படமும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது படம் ரீ ரிலீஸில் முதல் நாளிலேயே ரூபாய் 6 கோடிகள் வரை வசூலித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் ரீ ரிலீஸில் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த கில்லி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











