செல்பிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.. அத்துமீறி அநாகரீகமாக நடந்து கொண்ட ரசிகர்.. வைரலாகும் வீடியோ!
செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் நடிகை சாரா அலி கானிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மும்பை: நடிகை சாரா அலி கானுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்பி மோகம் பலரையும் ஆட்டிப்படைக்கிறது. விதவிதமாக செல்பி எடுத்து தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை பேச நினைக்கிறார்கள் பலர்.
அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளுடன் செல்பி எடுத்தக்கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதிப்பிரியம் உள்ளது. இதனால் பொது இடங்களில் நடிகர், நடிகையரை பார்க்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

அத்துமீறும் ரசிகர்கள்
அந்த சமயத்தில் நடிகர், நடிகையரிடம் ஒரு சில ரசிகர்கள் அத்துமீறி செயல்படுவதால் பிரச்சினைகள் உருவாகின்றன. அதுபோல் தான் நடிகை சாரா அலி கானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி செல்பி எடுக்க முயன்றிருக்கிறார்.

கேதார்நாத் நாயகி
கடந்தாண்டு வெளியான கேதார்நாத் படம் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாரா அலி கான். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதினை வாங்கினார். அதைத்தொடர்ந்து, நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் செல்பி
சாரா அலி கான் அண்மையில் அமெரிக்காவுக்கு விடுமுறைக்காக சென்றிருந்தார். அங்கு விடுமுறையை கழித்துவிட்டு இரு தினங்களுக்கு முன்னர் அவர் மும்பை திரும்பினார். சாரா மும்பை விமான நிலையம் வந்த போது, அவருடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர்.

இடுப்பில் கை
சாராவும் ரசிகர்களுடன் பொறுமையாக நின்று செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு ரசிகர் அத்துமீறி சாராவின் இடுப்பில் கை வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா, உடனே விலகிவிட்டார். இருப்பினும் செல்பிக்கு போஸ் கொடுத்துவிட்டு தான் அங்கிருந்து அவர் நகர்ந்தார்.

வைரலாகும் வீடியோ
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகையிடம் அத்துமீறிய அந்த ரசிகரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமையாக நடந்து கொண்ட சாராவை பலரும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











