Vijay: நடிகையை விஜய் தனியா எங்காவது கூட்டிட்டு போயிருந்தாலும் நம்பமாட்டோம்.. தீவிர ரசிகையின் ஆதரவு
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி உள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார். மேலும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் பிரசாரம் செய்யும் இடத்திற்கு எல்லாம் சென்று அவரைப் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவரது ரசிகை ஒருவர், " உங்களது வாழ்க்கையை முதலில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் ஒரு மனைவியா இருக்கிறார்கள்? நீங்கள் ஒழுக்கமா? விஜய் நடிகையுடன் பேசியதாக ஏதாவது ரெக்கார்டுகள் இருந்தால் காட்டுங்கள். ஏதாவது ஆதரம் இருந்தால் காட்டுங்கள். ஒன்றாக திருமணத்திற்குச் சென்றது, ஒரே மாதிரி ஆடைகள் அணிந்ததை வைத்து எல்லாம் சொல்லக் கூடாது.
இதுவரை விஜய் அந்த நடிகையை தனியாக கூட்டிக்கொண்டு சென்றுள்ளாரா? அதை நீங்கள் பார்த்தீர்களா? அப்போது கூட நாங்கள் நம்ப மாட்டோம். ஏன் என்றால் அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும். இந்த விஷயம் தொடர்பாக அவர் எதுவுமே பேசவில்லையே. தளபதி விஜய் பேசவேண்டிய அவசியமும் இல்லை. ஏன் என்றால் அவர் தப்பு செய்யவில்லை" என்று பேசி உள்ளார். இவரது இந்த கருத்து விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்று வருகிறது.

விவாகரத்து மனு: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதில், " நடிகர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இது தொடர்பாக கண்டித்தும் அவர் அந்த நடிகையுடனான உறவை கைவிடுவதாக இல்லை. மேலும் இது தொடர்பாக கண்டிக்கையில் விஜய் தன்னை பொருளாதார ரீதியாக சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல், புகுந்த வீட்டில் கிடைக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட தடுத்தார்" என குறிப்பிட்டிருந்தார்.

அதிருப்தி: சங்கீதாவின் விவாகரத்து கோரிக்கை தொடர்பான மனு பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், நடிகர் விஜய் தனது தோழி நடிகை த்ரிஷாவுடன் ஒரே மாதிரி மேட்சிங்காக டிரஸ் அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். விஜய்யின் இந்த செயல் பெரும் பேசு பொருளானது மட்டுமல்லாமல் பலருக்கும் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











