செம.. படக்குழுவை முந்திக் கொண்டு ரசிகர் வெளியிட்ட பிகில் டிரெய்லர்.. வெறித்தனம் போங்க!
ரசிகர் உருவாக்கிய பிகில் பட டிரெய்லர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடுவதற்கு முன்னரே, இணையத்தில் வெளியாகியுள்ள பிகில் பட டிரெய்லர் ஒன்று வைரலாகி வருகிறது.
மூன்றாவது முறையாக இணையும் விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணி, விஜய்க்கு ஜோடி நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை உள்ளிட்ட ஏராளமான காரணங்களால் பிகில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவருகிறது. போதாகுறைக்கு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகளும் படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து விட்டது.
சென்சார் பிரச்சினை, ரிலீஸ் பிரச்சினை, வியாபார பிரச்சினை எனப் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பிகில் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

வெறித்தனம்
போட்றா வெடிய, வெறித்தனம், பிகில்டிரெய்லர்டே உள்பட நிறைய ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர். அதில் பிகில் பட டிரெய்லர் எப்படி இருக்கும் என்ற தங்களுடைய கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர் உருவாக்கிய டிரெய்லர்
ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும்படியான ஒரு செயலை செய்திருக்கிறார் விஜய் ரசிகர் ஒருவர். பிகில் படத்திற்கு தானே ஒரு டிரெய்லரை கட் செய்து படு சூப்பராக உருவாக்கியுள்ளார் டீஜே என்பவர். இந்த டிரெய்லர் ஹலோ ஆப்பில் டிரெண்டிங்காகியுள்ளது.

சாமர்த்தியம்
டீஜே உருவாக்கியுள்ள பிகில் டிரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ள நிஜ டிரெய்லரின் முன்னோட்டம் போல் உள்ளது. சாமர்த்தியமாக விஜய்யை காட்டாமல், அவருடைய குரலை மட்டும் பயன்படுத்தி இருக்கிறார். அதுபோல் மிக புத்திசாலித்தனமாக, ஜடா படத்தில் கதிர் புட்பால் விளையாடும் காட்சிகளை எடுத்து சொருகியுள்ளார்.

வைரல்
மேலும் மிஸ்டர் லோக்கல் படத்தில் இருந்து நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள், ஏதோ ஒரு படத்தில் இருந்து ஜாக்கி ஷெராஃப் பேசும் டயலாக், சிங்கப்பெண்களின் ஆட்டம் என செமையாக கட் செய்துள்ளார் டீஜே. இந்த டிரெய்லரை விஜய் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











