Darbar:கெட்டபசங்க சார்.. ரஜினியை எங்க நிக்க வச்சிருக்காங்க பாருங்க.. பிரச்சினை வராம இருந்தா சரிதான்!

ரசிகர்கள் விதவிதமான தர்பார் போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர்.

சென்னை: தர்பார் ரஜினி படத்தை வெளியிட்டு, போஸ்டர் டிசைன் பண்ணச் சொன்னாலும் சொன்னார்கள், ரசிகர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி பறக்க விட்டு, படக்குழுவுக்கே பிரச்சினையை உண்டு பண்ணி விடுவார்கள் போல.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுவிட்டது. அது தவிர மும்பையில் படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் லீக்காகி வருகின்றன.

தர்பார் படங்கள்:

தர்பார் படங்கள்:

அதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸே ரஜினியின் ஹெச்டி புகைப்படங்கள் இரண்டை வெளியிட்டார். அதை வைத்து ரசிகர்கள் அழகான போஸ்டர்கள் உருவாக்கலாம் எனவும் அவர் அறிவித்தார். அந்தப் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் எனக் கூறவும், ரசிகர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி ஓட விட ஆரம்பித்து விட்டனர்.

சட்டசபையில் ரஜினி:

சட்டசபையில் ரஜினி:

இதனால் இணையத்தில் ரஜினியை வைத்து விதவிதமான போஸ்டர்கள் உலா வருகின்றன. சில போஸ்டர்கள் வில்லங்கமாக இருக்கின்றன. இந்தப் புகைப்படத்தில் ரஜினி தமிழக சட்டசபையில் நின்று பேசுவது போல் இந்த ரசிகர் டிசைன் செய்துள்ளார். ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், இந்தப் போஸ்டரில் அவரை முதல்வராகவே நிறுத்தி அழகு பார்த்து விட்டார் இந்த ரசிகர்.

போலீஸ் ரஜினி:

இந்த ரசிகர், ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினி போலீசாக நடிப்பதை மனதில் வைத்து இந்தப் போஸ்டரை உருவாக்கி இருக்கிறார். ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தர்மா என்றும் பேர் வைத்துள்ளார். தர்மத்தினைக் காப்பவன் என்ற அர்த்தத்தில் இப்படி வைத்து விட்டார் போலும். ஆனால், இதுவும் அழகாகத்தான் இருக்கிறது.

நான்கு போஸ்டர்:

இவர் ஒன்றல்ல, நான்கு போஸ்டர்களை தயார் செய்திருக்கிறார். அதில் ஒன்றில் மும்பை நேவி என இருக்கிறது. இவரும் ரஜினியை வைத்து டிசைன் டிசைனாக போஸ்டர்களை உருவாக்கி இருக்கிறார்.

கத்தி ஸ்டைல்:

கத்தி விஜய் பட போஸ்டர் மாடலில் இந்த ரசிகர் ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். அந்தப் போஸ்டரில், பர்ஸ்ட் லுக்கில் இருந்த, ‘நான் நல்லவனா இருக்கணுமா இல்ல கெட்டவனா மாறணுமா. அதை நீயே முடிவு செய்து கொள்' என்ற வாக்கியத்தையும் சேர்த்துள்ளார்.

ஹேஷ்டேக்:

ஹேஷ்டேக்:

இந்த ரசிகரும் இரண்டு போஸ்டர்களை உருவாக்கி இருக்கிறார். இரண்டும் மாஸாக இருக்கிறது. ரஜினியின் இந்த போஸ்டர்களை #darbarposterdesign என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சிலர் ஓவர் ஆர்வக்கோளாறில் டிசைன் செய்யும் போஸ்டர்கள் படத்திற்கு பிரச்சினை ஆகாமல் இருந்தால் சரிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X