தீயாக பரவும் நேர்கொண்ட பார்வை புது போஸ்டர்: டிசைன் செய்தது யார் தெரியுமோ?
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டர் பிரபலமாகியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அதுவும் சனிக்கிழமை ரிலீஸாக உள்ளது.
இந்த சனிக்கிழமை கணக்கு தான் பலருக்கும் புரியவில்லை.
ரசிகர்
நேர்கொண்ட பார்வை படத்திற்கு அஜித் ரசிகர் ஒருவர் போஸ்டர் டிசைன் செய்துள்ளார். அந்த போஸ்டரை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மே 1
அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி நேர்கொண்ட பார்வை பட டீஸரை வெளியிடுமாறு ரசிகர்கள் வினோத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிச்சயம் தல பிறந்தநாளுக்கு ஏதாவது சர்பிரைஸ் கிஃப்ட் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வினோத்
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் தல 60 படத்தையும் ஹெச். வினோத் தான் இயக்குகிறாராம். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் கதை அஜித்துக்காகவே எழுதப்பட்டுள்ளதாம்.

ரீமேக்
நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார் வினோத். அவர் என்ன மாற்றங்களை செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











