28 மொழிகளில் “நீ தான் என் வாழ்க்கை”.. ஹன்சிகா ஹேப்பி அண்ணாச்சி!
ரசிகர் ஒருவரின் பதிவால் ஹன்சிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரசிகர் ஒருவர் 28 மொழிகளில் 'ஹன்சிகா மை லைப்' என எழுதி நடிகை ஹன்சிகாவை நெகிழ வைத்துள்ளார்.
குட்டி குஷ்பு என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஹன்சிகா, உடல் எடையைக் குறைத்தும் கைவசம் அதிக படங்கள் இல்லை. ஆனாலும், அவரது ரசிகர்களின் அன்பால் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரைப் பற்றி ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவு அவரை இன்னும் நெகிழச் செய்துள்ளது.
ஹன்சிகா என் வாழ்க்கை:
ரசிகர் ஒருவர் சுமார் 28 மொழிகளில் ‘ஹன்சிகா மை லைப்' என தன் கைப்பட எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழியிலும், ‘ஹன்சிகா என் வாழ்க்கை' என உள்ளது.
நன்றி:
இந்தப் பதிவைப் பார்த்து ஹன்சிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக, ‘வாவ், இது மிகவும் நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி' என அவர் பதிலளித்துள்ளார்.
ரசிகர்:
ஹன்சிகா மீது கொண்ட அதீத அன்பை இப்படி வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார் அந்த ரசிகர். அவர் ஹன்சிகா மை லைப் என்ற பெயரில் டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் ஹன்சிகா தொடர்பான செய்திகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார். ஹன்சிகா தனது பதிவைப் பார்த்து நன்றி தெரிவித்ததால், அந்த ரசிகர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பப்ளி ஹன்சிகா:
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த ரசிகர். தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகியுள்ள ஹன்சிகாவை இவருக்குப் பிடிக்கவில்லையாம். பழைய பப்ளியான ஹன்சிகா தான் மீண்டும் வேண்டுமாம். இந்த கோரிக்கையை ஹன்சிகா பரிசீலிப்பாரா எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











