மகனுக்கு 'தளபதி விஜய்' என்று பெயர் வைத்த பாசக்கார ரசிகர்: ஆதாரம் இதோ
புதுச்சேரி: விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு தளபதி விஜய் என்று பெயர் வைத்துள்ளார்.
இளைய தளபதியாக இருந்த விஜய் அண்மையில் தளபதி ஆனார். தளபதி விஜய்க்கு தமிழகம், புதுச்சேரியை தவிர கேரளாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

தங்களுக்கு பிடித்த நடிகரின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு ரசிகர் விஜய்யின் பெயரை தனது மகனுக்கு வைத்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ண குமாரின் மனைவி ராஜேஸ்வரி கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தளபதி விஜய் என்று பெயர் வைத்துள்ளனர்.
அந்த தளபதி விஜய்யின் பிறப்பு சான்றிதழ் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











