ச்சோ ஸ்வீட், இளம் ஹீரோவின் கன்னத்தை பிடித்து இழுத்த ரசிகை: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

இளம் ஹீரோவின் கன்னத்தை பிடித்து இழுத்த ரசிகை: வைரல் வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் கன்னத்தை பிடித்து ஒரு ரசிகை இழுத்துள்ளார்.

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் கார்த்திக் ஆர்யன். அவர் தற்போது பதி, பத்னி அவ்ர் வோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் சாரா அலி கானுடன் சேர்ந்து நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் நடிக்க உள்ள தோஸ்தானா 2 படத்தில் அவரின் தங்கையாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

Fan pulls Kartik Aaryans cheek

கார்த்திக் ஆர்யன் ரசிகர்கள் அல்லது ரசிகைகள் வந்து செல்ஃபி கேட்டால் முகம் சுளிக்காமல் சிரித்தபடி போஸ் கொடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விமான நிலையத்தில் கார்த்திக் ஆர்யனை பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துவிட்டனர்.

அப்பொழுது அவர் ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். ரசிகை ஒருவர் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்ததுடன் கார்த்திக் ஆர்யனின் கன்னத்தை பிடித்து இழுத்தார். கன்னத்தை பிடித்து இழுத்தும் கார்த்திக் கோபப்படாமல் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.

ரசிகை கார்த்திக் ஆர்யன் கன்னத்தை பிடித்து இழுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் ஆர்யனின் பொறுமையை பாராட்டியுள்ளனர்.

வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அந்த பெண் படுத்தும் பாட்டை பார்த்தால் நமக்கே கடுப்பாகிறது. ஆனால் கார்த்திக் ரொம்பவே பொறுமையாக இருந்துள்ளார். வீடியோவில் அவர் க்யூட்டாக உள்ளார். ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் இருந்தது தெரிந்து கார்த்திக் ஆர்யன் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. தான் ஒரு ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் சாதாரண ஆள் போன்று நடந்து கொள்கிறார். இப்படியே இருங்க கார்த்திக் ஆர்யன் ஜி என்கிறார்கள் ரசிகர்கள்.

கார்த்திக் ஆர்யனும், சாரா அலி கானும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக உள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுவது, ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் அடிக்கடி செல்வது, விமான நிலையத்தில் டிராப் செய்வது ஆகியவற்றை பார்த்து அவர்களுக்கு இடையே காதல் என்பதை பலரும் உறுதி செய்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X