செய்வீங்களா?: பிரபல நடிகருக்கு புற்றுநோயுடன் போராடும் ரசிகர் உருக்கமான வேண்டுகோள்

By Siva

ஜெய்பூர்: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் விளம்பரம் செய்யும் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை பொருளை பயன்படுத்திய ரசிகர் தற்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார்.

பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கனின் தீவிர ரசிகர் நானக்ராம் மீனா(40). அஜய் குறிப்பிட்ட பிராண்டு புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தை டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.

அவர் விளம்பரப்படுத்திய புகையிலையை வாங்கி சாப்பிட்ட நானக்ராம் மீனாவுக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

துண்டு அறிக்கை

துண்டு அறிக்கை

நானக்ராம் மீனா தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பிறகு 1,000 துண்டறிக்கை அடித்து ஜெய்பூர் நகரில் பலருக்கு கொடுத்ததுடன், சுவர்களிலும் ஒட்டியுள்ளார். அந்த துண்டறிக்கையில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது குடும்பத்தார் எவ்வளவு புகையிலை சாப்பிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

புகையிலை, மது, சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதனால் அதன் விளம்பரங்களில் பாலிவுட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது. அவர்கள் நடிப்பதை பார்த்து தான் ரசிகர்கள் பலர் அதை வாங்கி பயன்படுத்தி அவதிப்படுகிறார்கள் என்று அந்த துண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் விற்பனை

பால் விற்பனை

நானக்ராம் மீனா ஜெய்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். புற்றுநோயால் அவர் பேசும் திறனை இழந்துவிட்டார். இதையடுத்து சாய்வாலா ஆன நானக்ராம் தற்போது வீட்டில் இருந்தபடியே பால் விற்பனை செய்கிறார்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

முன்னதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவையும் ரஜினிகந்தா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் விளாசினார்கள். உங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தீங்கு விளைவிக்கும் பொருளை விளம்பரம் செய்வதா என்று கேள்வி எழுப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X