ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்: காரணம்...

By Siva

மும்பை: ஷாருக்கானை நேரில் பார்க்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த 2ம் தேதி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவில் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்திற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.

தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நோக்கி ஷாருக்கான் கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

கவலை

கவலை

மும்பை தாராவி பகுதியை சேர்ந்த முகமது சலீம் அலாவுத்தீன் என்பவர் தனக்கு பிடித்த நடிகரான ஷாருக்கானை காண நேற்று அவரின் வீட்டிற்கு முன்பு அதிகாலை நேரம் முதலே நின்று கொண்டிருந்தார். சுமார் 3 மணிநேரம் அங்கு காத்திருந்தும் அவரை காண முடியவில்லை. இதனால் மனமுடைந்த அலாவுத்தீன் தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

மருத்துவமனை

ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அலாவுத்தீனை மீட்டு அருகில் உள்ள பாபா மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அந்த நபரை தூக்கிச் சென்றபோது ஷாருக் சார் என்று அவர் கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை அறுத்த பிறகும் அவர் அங்கிருந்து வர மறுத்ததால் போலீசார் தூக்கிச் சென்றனர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

அலாவுத்தீன் செய்த காரியத்தால் ஷாருக்கானின் பங்களா உள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மன்னத் அருகே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளப்

கிளப்

முன்னதாக ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றது. ஊரே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கிளப்பில் பாட்டு சத்தம் ஓவராக இருந்ததால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து பார்ட்டியை நிறுத்தினார்கள். போலீசார் வந்ததும் ஷாருக்கான் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X