கணவர் மீது பிராவை வீசிய ரசிகை: ப்ரியங்கா என்ன செய்தார் தெரியுமா?
நியூயார்க்: நிக் ஜோனஸ் மீது ரசிகை ஒருவர் பிராவை தூக்கி வீச அதை எடுத்து கணவரிடம் கொடுத்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் பாடகர் ஆவார். ஜோனஸ் சகோதரர்கள் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா கணவர் பாடியதை கேட்டு ரசித்தார்.
ப்ரியங்கா
ஜோனஸ் சகோதரர்கள் பாடும் நிகழ்ச்சியில் முதல் முதலாக கலந்து கொண்ட மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
பிரா
இசை நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி வீசிய பிரா ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.
சைகை
நிக் ஜோனஸ் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது ப்ரியங்காவை பார்த்து சைகையால் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

திருமணம்
ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த வீடியோக்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











