தீவிர ரசிகரா இருப்பார் போலிருக்கே.. 200 கி.மீ நடந்து பிரபல ஹீரோவை சந்திக்க வந்த ஃபேன்!

By

ஐதராபாத்: பிரபல ஹீரோவின் தீவிர ரசிகர் ஒருவர், அவரைக் காண இருநூறு கி.மீ நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு ஹீரோ, வெங்கடேஷ். பிரபல தயாரிப்பாளரான ராமநாயுடுவின் மகன் இவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

அசுரன் ரீமேக்

அசுரன் ரீமேக்

நடிகர் ராணாவின் சித்தப்பாவான இவர், இப்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் அசுரன். இதில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். அவர் மனைவியாக பிரியாமணி நடிக்கிறார்.

200 கிலோ மீட்டர்

200 கிலோ மீட்டர்

நாரப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஶ்ரீகாந்த் அட்டலா இயக்குகிறார். பிரகாஷ் ராஜ், முரளி சர்மா, சம்பத்ராஜ், கார்த்திக் ரத்னம் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்நிலையில், நடிகர் வெங்கடேஷின் தீவிர ரசிகர் ஒருவர் இருநூறு கிலோ மீட்டர் நடந்து அவரை தேடி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேரில் சந்திக்க

நேரில் சந்திக்க


தெலங்கானா மாநிலம் தண்டூர் அருகில் உள்ள புட்டாராம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஶ்ரீனிவாஸ். வெங்கடேஷின் ரசிகரான இவர், அவரை நேரில் சந்திக்க முடிவு செய்தார். நடந்தே சென்று சந்திப்பது என்று முடிவு, 200 கிலோ மீட்டர் நடந்து ஐதராபாத் வந்தார்.

வெங்கடேஷ் இல்லை

வெங்கடேஷ் இல்லை

அங்கு ராமாராவ் ஸ்டூடியோவுக்கு வந்த அவர், விஷயத்தைச் சொன்னார். ஆனால், அவர் நேரம் வெங்கடேஷ் ஐதராபாத்தில் இல்லை. இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறார் ஶ்ரீனிவாஸ். 'நாரப்பா ஷூட்டிங்கிற்காக வெங்கடேஷ் வெளியே சென்றிருக்கிறார். வந்ததும் சொல்கிறோம் என்று அவரிடம் ராமாராவ் ஸ்டூடியோவில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

பல கிலோ மீட்டர்கள் நடந்து வந்து தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களை ரசிகர்கள் சந்திக்க வருவது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புதிதில்லை. சமீபத்தில் நூறு கிலோமீட்டர் நடந்து வந்து தனது ஹீரோ வருண் தேஜை ரசிகர் ஒருவர் சந்தித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் நடிகர் அல்லு அர்ஜூனையும் ரசிகர் ஒருவர் 200 கி.மீ நடந்து நேரில் சந்தித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X