நடிகரை பார்க்க 900 கிலோமீட்டர் நடந்தே வந்த ரசிகர்: வைரல் வீடியோ
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பார்க்க ரசிகர் ஒருவர் 900 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவரை பலர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் அவர் தனது ரசிகர் ஒருவரின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாவை சேர்ந்தவர் பர்பாத். அவர் அக்ஷய் குமாரை பார்க்க துவாரகாவில் இருந்து மும்பைக்கு நடந்தே வந்துள்ளார். 18 நாட்களில் 900 கிலோமீட்டர் நடந்து வந்து அக்ஷய் குமாரை சந்தித்து பேசியுள்ளார்.
பர்பாத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் அக்ஷய். மேலும் தன்னை பார்க்க கால் கடுக்க நடந்து வந்த பர்பாத்துடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் பெருமையுடன் வெளியிட்டுள்ளார் அக்கி.
அக்ஷய் குமாரின் ட்வீட்டுகளை பார்த்தவர்கள் அவருக்கு இப்படியும் ஒரு ரசிகரா என்று வியந்துள்ளனர். நடிகர்கள் மீது ரசிகர்கள் பாசம் வைப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் இது போன்ற ரசிகர்கள் கிடைக்க அக்ஷய் குமார் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பர்பாத் தினமும் 50 முதல் 55 கிலோமீட்டர் நடந்து 18 நாட்களில் மும்பையை அடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அக்ஷய் குமார் வீட்டில் இருப்பார் என்பதால் அன்றைய தினம் அவரை சந்திக்க திட்டமிட்டு நடந்துள்ளார். சனிக்கிழமை கனமழை பெய்தும் அதை பொருட்படுத்தாது நடந்து வந்துள்ளார் பர்பாத்.
இந்நிலையில் அக்ஷய் குமார் பர்பாத் பற்றி ட்விட்டரில் கூறியதாவது,
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் இது போன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் நேரத்தை வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தவும். அது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். பர்பாத்துக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











