அஜித்தை பழி வாங்கிய த்ரிஷா.. 13 வருட காத்திருப்புக்கு பலன்.. டீகோட் செய்த ரசிகர்கள்.. இது வேற லெவல்!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி, நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, நேற்று ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் படத்தை ரசிகர் ஒருவர் டீ கோட் செய்தது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித் உடன், அர்ஜுன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதுமே, ரசிகர்கள் ஏகப்பட்ட குஷியில் ஆழ்ந்து போனார்கள். காரணம், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மங்காத்தா படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் அஜித்தின் 50வது படமும் கூட. வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் த்ரிஷாவும் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வசூலிலும் அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

மங்காத்தா படத்தையும் இப்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள, விடாமுயற்சி படத்தையும் இணைத்து ரசிகர் ஒருவர் டீ கோட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது மங்காத்தா படத்தில் அஜித் த்ரிஷாவை காதலிப்பது போல் நடிப்பார்.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

ஆனால் த்ரிஷா உண்மையிலேயே அஜித்தை காதலிப்பார். அஜித் மற்றும் அர்ஜுன் போட்ட திட்டப்படி, அஜித், த்ரிஷாவை காதலித்து ஏமாற்றிவிடுவார். மங்காத்தா படத்தின் திரைக்கதைக்கும் அஜித்தின் கதாபாத்திர வடிவமைப்புக்கும் இப்படியான காட்சி மிகவும் தேவைப்பட்டது. மேலும் அந்தக் காட்சிகள் பாராட்டவும் பட்டது.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

அஜித் - த்ரிஷா: இப்படியான நிலையில், மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் விடாமுயற்சி படம் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தில், கணவன் மனைவியாக அஜித் மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர். இதில் த்ரிஷா, அஜித்திடம் இருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் விடாமுயற்சி படத்தில் உள்ளது.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

பழி வாங்கிய த்ரிஷா: இதனைப் பார்த்த ரசிகர், 13 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை காதலித்து ஏமாற்றிய அஜித்தை, திருமணம் செய்து விடாமுயற்சி படத்தில் த்ரிஷா பழிவாங்கி விட்டார் என ரசிகர் ஒருவர் இரண்டு படங்களையும் சேர்த்து, டீ கோட் செய்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

அவரது இந்தப் பதிவு இணையவாசிகள் மத்தியில், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா இறந்து விடுவார் என்பதை டீகோட் செய்த ரசிகர் மறந்துவிட்டார் என்று பதிவிட்டு வருகிறார்கள். விடாமுயற்சி படத்திற்கு இப்படி ஒரு டீ கோட் இருக்கும் என அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, விடாமுயற்சி படக்குழுவினரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

vidaamuyarchi ajithkumar mankatha trisha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X