வாயில ரெண்டு சிகரெட்.. ஏவிஎம்மை அலற விட்ட ரஜினிகாந்த்.. அப்படியே கண்முன்னே வந்து நிக்குதே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி அவரே நடித்த படமான படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு ட்ரிபியூட் செய்யும் வகையில் அவரது ரசிகர்கள் அவருக்காக பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது தனது ஆரம்பகட்ட திரை வாழ்க்கையில் சந்தித்த அவமானகரமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாலும், தான் அவமானப்பட்ட இடத்திலேயே வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த ரஜினிகாந்த் அடுத்த 2.5 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் உச்சத்தை அடைந்து அசத்தினார். அது மட்டும் இல்லாமல், தான் எந்த தயாரிப்பாளர் முன், அவமானப்படுத்தப்பட்ட இடத்தில் அந்த தயாரிப்பாளர் வைத்திருந்த வெளிநாட்டு உற்பத்திக் காரை வாங்கி, அதே காரில் சென்று, இரண்டு சிகரெட்டுகளை பற்ற வைத்து பந்தாவாக பதிலடியும் கொடுத்துள்ளார்.

வைராக்கியம்: மேலும் இந்த படம் வெளியான போது அவரது நடிப்பில் உருவான 16 வயதினிலே படமும் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் அவரது ஐகானிக் டயலாக்கான "இது எப்படி இருக்கு?" என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அப்போது பேருந்தில் சென்று கொண்டு இருந்தவர்கள் ரஜினியைப் பார்த்து இது எப்படி இருக்கு என்ற டயலாக்கைச் சொல்லி உள்ளார்கள். ஆனால் அவமானபட்டு வெளியே வந்த ரஜினிக்கு தன்னைப் பார்த்து சொல்லப்பட்ட இந்த வசனம் வைராக்கியத்தை நோக்கித் தள்ள ஒரு காரணமாக இருந்துள்ளது.

Fan Who Made AI Video For Tribute Rajinikanth Birthday Special About Rajini
Photo Credit:

வீடியோ: அன்று முடிவெடுத்தார், என்ன முடிவெடுத்தாரோ அதை அப்படியே செய்து பதிலடியும் கொடுத்துள்ளார். இதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்ட போது ரசிகர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அவர் பதிலடி கொடுத்ததும் உத்வேகத்தை கொடுத்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் ரஜினி அவமானப்பட்டதை வீடியோவாக உருவாக்கி, பகிர்ந்துள்ளார்கள். அந்த வீடியோ சினிமாவில் வரும் மாஸான காட்சிகளைப் போல் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வேகமாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஃபயர் விட்டு வருகிறார்கள்.

இரண்டு சிகரெட்: குறிப்பாக ரஜினி இரண்டு சிக்ரெட்களை பற்ற வைத்து இழுப்பதை போல உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐ காட்சி சமூக வலைளத்தை ஆக்கிரமிக்கும் என்று கூறும் அளவுக்கு உள்ளது. தியேட்டரில் நாளை இது போன்ற ஏ.ஐ வீடியோக்களையும் திரையிட்டால் சிறப்பாக இருக்கும், என்றும் சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X