என்னால்தான் சாண்டியின் 2வது திருமண வாழ்க்கை நாசமாகிறதா..? முதல் மனைவி காஜல் என்ன சொல்றாங்கனு பாருங்க
தனது முன்னாள் கணவர் சாண்டியின் திருமண வாழ்க்கை பற்றி காஜல் பசுபதி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர் சாண்டியின் வாழ்க்கை தன்னால் தான் நாசமாகிறதா என சாண்டியின் முதல் மனைவியும் நடிகையுமான காஜல் பசுபதி விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை காஜல் பசுபதி. இவரும் நடன இயக்குநரும், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சிலப்பல காரணங்களால் அவர்கள் பிரிந்து விட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அதன்பின் சாண்டி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
செல்லம்:
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வரும் சாண்டியைப் பற்றி அவ்வப்போது டிவீட் போட்டு வருகிறார் காஜல். அதில் சாண்டியை செல்லம் என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறார். அதோடு சாண்டி பற்றி பேட்டியும் கொடுத்து வருகிறார்.

காதல் பிரச்சினை:
சமீபத்திய டிவீட் ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் காதல் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவித்திருந்தார் காஜல். அந்தப் பதிவிற்கு பதிலளித்திருந்த நெட்டிசன் ஒருவர், ‘மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன் நீங்கள் அதை பின்பற்றுங்கள். நீங்கள் சாண்டி மீது அக்கறை, அன்பு வைத்திருக்கிறீர்கள்.

கேள்வி:
ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும், சாண்டிக்கு இரண்டாவது வாழ்க்கை அமைந்துவிட்டது என்று. சாண்டி மீது நீங்கள் தற்போது காட்டும் அன்பால் அவரது மனைவி கஷ்டப்படமாட்டாரா? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்தக் கேள்வி பெரும்பாலான சாண்டி ரசிகர்களின் மனதிலும் எழத் தான் செய்தது.

காஜல் விளக்கம்:
எனவே, இதற்கு காஜலும் தனது டிவீட் வாயிலாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் இப்படி நடந்து கொள்வதால், சாண்டி மனைவியின் மனம் புண்பட்டுள்ளதா என்று போய் கேளுங்கள்? நீங்கள் விரும்பும் வழியில் அவள் பதிலளிக்க போகிறாள் என்று நான் நினைக்கவில்லை.

பாராட்டு:
எங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. உங்களை போல அவர் ஒரு போதும் என்னை அப்படி நினைத்தது இல்லை. கற்பனையை நிறுத்துங்கள். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எதையும் கேட்காதீர்கள்' என அதிரடியாக பதிலளித்துள்ளார். நிச்சயம் இந்த பதில் சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்களுக்கு சவுக்கடி என்பதில் சந்தேகமேயில்லை. காஜலின் இந்தப் பதிவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications