ஏன் ஐஸ்வர்யா இப்படியெல்லாம் பண்றீங்க..கொஞ்சம் ப்ரீயா இருங்க.. எல்லாம் அவர வெறுப்பேத்த தானே?
சென்னை : ஐஸ்வர்யா தனுசை விட்டு பிரிந்த பிறகு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவே உள்ளார்.
உடற்பயிற்சி செய்வது, யோகாசனம் செய்வது, பிரபலங்களை சந்திப்பது என தொடர்ந்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்
இதைப்பார்த்த நெட்டிசன் எதுக்கு இந்த வேலை, இதெல்லாம் தனுசை வெறுப்பேத்ததானே என்று கேட்டு வருகின்றனர்.

பிரிந்தனர்
கடந்த ஜனவரி மாதம் தனுஷூம், ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது திரைப்பிரபலங்களுக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தனுஷின் அப்பா, இது சாதாரண குடும்ப சண்டைதான் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

சமாதானம் ஆகாத தனுஷ்
ஐஸ்வர்யாவின் எண்ணமும் தனுஷூடன் சேர்ந்துவிட வேண்டும் என்றே இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தனுஷ் சமாதானம் ஆகவில்லையாம். அதே போல தனுஷின் மாறன் படம் வெளியான போது அதற்கு ஐஸ்வர்யா லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இனி வாய்ப்பில்லை
இதேபோல, ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்திற்கும் வாழ்த்துக்கள் தோழி என்று பதிவிட்டு இருந்தார். அதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை மாற்றாமல் இருந்த ஐஸ்வர்யா, அதன்பிறகு, தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிக்கொண்டார். இதனால் இருவரும் இனி சேர வாய்ப்பே இல்லை என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
விரக்தியில் ஐஸ்வர்யா
தனுஷூடனான பிரிவை ஐஸ்வர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விரக்தியில் இருக்கும் ஐஸ்வர்யா தான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ, போட்டோ என தினமும் ஏதாவது ஒன்றை பகிர்ந்து வருகிறார்.

சந்தோசமா இருக்கியாமா?
ஐஸ்வர்யாவின் இதுபோன்ற பதிவினை பார்த்த ரசிகர்கள், புருஷன் புள்ளைங்க கூட சந்தோசமா இருக்கியாமா? உடற்பயிற்சி யோகா செஞ்சி நூறு வயசு வரைக்கும் வாழ்ந்து என்ன பண்ண போறீங்க என்று இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

தனுசை வெறுப்பேத்ததானே
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே கொனேரா மற்றும் தலை சுற்றல் காரணமாக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் தீவிர உடற்பயிற்சி வீடியோவை பார்த்த, ஒரு ரசிகர், நீங்க பண்ணுற ஒவ்வொரு விஷயமும் உங்க எக்ஸ் ஹஸ்பண்ட் தனுசை வெறுப்பேத்துற மாதிரி தான் இருக்கு, கொஞ்சம் ப்ரீயா இருங்க என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











