என்ன அழகு.. ஏமாற்றி துரோகம் செய்தவர்களை விடவேக் கூடாது.. பிரபல நடிகைக்கு கொம்பு சீவி விடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்களை ஏமாற்றி துரோகம் செய்தவர்களை விடவேக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video
மாடலும் நடிகையுமாக இருப்பவர் சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் காதலித்து வந்தனர்.
பெற்றோருக்கு கூட தெரியாமல் சனம் ஷெட்டியை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் தர்ஷன். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தர்ஷனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

புறக்கணிப்பு
இந்நிலையில் தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பதாக நடிகை சனம் ஷெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்களுடன் தனக்கு தவறான உறவு இருப்பதாக கூறி தர்ஷன் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார் சனம் ஷெட்டி.

திருமணம் நடக்காது
இதனை தொடர்ந்து பேசிய தர்ஷன், அவருக்கு முன்னாள் காதலருடன் தொடர்பு உள்ளது. இரவு முழுக்க அவருடன் பார்ட்டி பண்ணியுள்ளார் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். அதோடு அவர் பிகினி போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றம் திட்டவட்டமாக கூறினார்.

க்யூட் போட்டோக்கள்
இதன் தொடர்ச்சியாக மீடியாக்களுக்கு கண்ணீர்மல்க பேட்டி அளித்தார் நடிகை சனம் ஷெட்டி. இந்த பிரச்சனையால் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்த நடிகை சனம் ஷெட்டி, கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

புதிய போட்டோ
அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் நம்மை ஏமாற்றி துரோகம் செய்தவர்களை விடவே கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
விடவேக் கூடாது
அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ரொம்ப அழகு என அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த ரசிகர், உங்கள் பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது அதே வேளையில் நம்மை ஏமாற்றி துரோகம் செய்தவர்களையும் விடக்கூடாது என தர்ஷனை மறைமுகமாக சாடி கருத்து பதிவிட்டுள்ளார்.
தர்ஷன விடுங்க
சனம் ஷெட்டியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், நீங்கள் ஏன் ஒல்லி சனம்மாக இருக்கிறீர்கள்.. கொஞ்சம் வெயிட் போட்டால் ரொம்ப அழகாக இருப்பீர்கள்.. நான் சொல்வதை நம்புங்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், என்ன அழகு நீங்க.. சூப்பர்.. தர்ஷன விடுங்க உங்க வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்க.. என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











