இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.. குவியும் இரங்கல்கள் #RIPKVAnand

சென்னை: கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீரென காலமானார்.

Recommended Video

KV Anand மறைவு! பிரபலங்கள் கண்ணீர் | Vivekh இழப்பே மறக்கவில்லை #RIPAnand

அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் #RIPKVAnand என்ற ஹாஷ்டேக்கில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி. ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்திய செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மிகவும் அன்பாக பேசக் கூடியவர்

மிகவும் பணிவும் அன்பும் கொண்டவர் இயக்குநர் கே.வி. ஆனந்த். பார்ப்பவர்களிடம் மிகவும் அன்பாக பேசக் கூடிய மனிதர், ஏகப்பட்ட திறமைகளின் கூடாரமாக இருந்த அவர் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியடைய செய்துள்ளதாக நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அயன் படத்தை எப்போதுமே மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பவே முடியல

முதல்வன், சிவாஜி என ஏகப்பட்ட படங்களுக்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்தவர் இயக்குநர் கே.வி. ஆனந்த். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #RIPKVAnand என்ற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது ஃபிரேம்ஸ்

நடிகர் மோகன் லாலின் தென்மாவின் கொம்பத்து படம் மூலமாக 1994ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி. ஆனந்த். முதல் படத்திலேயே அவரது அற்புதமான ஃபிரேம்களினால் பலரையும் அதிசயிக்க வைத்து தேசிய விருதையும் தட்டிச் சென்றார். அந்த படத்தின் காட்சிகளையும் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

மோகன் லால் இரங்கல்

இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு நடிகர் மோகன் லால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நமது பார்வையில் இருந்து மட்டுமே அவர் மறைந்துள்ளார். நமது மனங்களில் இருந்து அல்ல என்று மிகவும் உருக்கமான ட்வீட்டை நடிகர் மோகன் லால் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் இரங்கல்

சூர்யாவின் மாற்றான் படத்தில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நாயகியாக பணியாற்றிய நடிகை காஜல் அகர்வால், நான் பணியாற்றிய சிறந்த இயக்குநர்களில் சிறப்பானவர் கே.வி. ஆனந்த் என்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் பிரார்த்தனை செய்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், ஏகப்பட்ட பிரபலங்களும் கே.வி. ஆனந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X