சிவகார்த்திகேயனின் சிநேகிதன்.. லாஸ்லியாவின் பிரெண்ட்.. நம்ம அண்ணாத்த காமெடி நடிகருக்கு பிறந்தநாள்!

சென்னை: நகைச்சுவை எழுத்தாளரும் காமெடி நடிகருமான சதீஷின் 33வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Actor Sathish Saloon | அப்பாவிற்கு shave செய்த Video | Lock Down Diaries

கிரேஸி மோகனின் நாடகங்களுக்கு நகைச்சுவை எழுதி வந்த வசனகர்த்தா சதீஷ், ஏ.எல். விஜய்யின் 'பொய் சொல்ல போறோம்' படத்திற்கு வசனகர்த்தாவாக சினிமா உலகில் என்ட்ரியானார்.

சிவகார்த்திகேயனுடன் மெரினா முதல் மிஸ்டர் லோக்கல் வரை பல படங்களில் தொடர்ந்து காமெடியில் கலக்கி வருகிறார்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படத்தில் சதீஷ் காமெடியில் கலக்கி இருப்பார். அதே போல பைரவா படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும். சதீஷ் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் சிநேகிதன்

சிவகார்த்திகேயனின் சிநேகிதன்

மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரெமோ, மிஸ்டர் லோக்கல் என நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடியில் பல படங்களில் அசத்தி வருகிறார் நடிகர் சதீஷ். கிராமத்து சப்ஜெட் என்றால், சூரியையும், நகரத்து சப்ஜெக்ட் படங்களில் சதீஷுடன் ஜோடி போட்டும் காமெடி விருந்து வைத்து வருகிறார். சினிமாவை தாண்டியும் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நல்ல சினேகிதர்கள்.

ஒரே படத்தில்

ஒரே படத்தில்

தன்னை ஒரு நடிகராக நிரூபிக்க சதீஷுக்கு கிடைத்த ஜாக்பாட் படம் என்றால், அது தமிழ்ப்படம் 2 தான். ஒரே படத்தில் பெண் வேடம் முதல் 2.0 பக்ஷி ராஜன் வேடம் வரை என வித்தியாசமான பல கெட்டப்களை போட்டு நடித்து அசத்தியிருந்தார். லாக்டவுன் நேரத்தில் கூட அந்த படத்தில் நீக்கப்பட்ட மேலும் சில கெட்டப் புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கினார்.

கல்யாண பரிசு

கல்யாண பரிசு

விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வந்த காமெடி நடிகர் சதீஷுக்கு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிந்துவை சமீபத்தில் திருமணம் செய்த சதீஷுக்கு கல்யாண பரிசாக, அண்ணாத்த படத்தில் ஆன்போர்ட் ஆன செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப்

லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப்

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடித்து வரும் பிரெண்ட்ஷிப் படத்திலும் நடிகர் சதீஷ் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இன்று தனது 33வது பிறந்தநாள் கொண்டாடும் சதீஷுக்கு நடிகை லாஸ்லியா சார்பாகவும், பிரெண்ட்ஷிப் படக்குழு சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X