அதே எனர்ஜியுடன் அண்ணாத்த திரும்பி வருவார்.. நடிகர் ரஜினிகாந்த் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு வழக்கமான செக்கப் தான் வேறு ஒன்றும் இல்லை அவர் நலமுடன் இருக்கிறார் என ரஜினி தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாத குழந்தை உயிர் பிழைக்க நீங்கள் மனது வைத்தால் உதவ முடியும்

தாதா சாகேப் பால்கே விருது

தாதா சாகேப் பால்கே விருது

திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேல் சாதனை படைத்து வரும் நடிகருக்கு சினிமா துறையின் மிகவும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது 67வது தேசிய விருது விழா நிகழ்ச்சியின் போது துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கரங்களால் வழங்கப்பட்டது. விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவர்களுடன் சந்திப்பு

தலைவர்களுடன் சந்திப்பு

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பேரன்களுடன் படம் பார்த்தார்

பேரன்களுடன் படம் பார்த்தார்

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சியை கண்டு ரசித்தார். பேரக் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அண்னாத்த படம் பார்த்தது குறித்தும் ரஜினிகாந்த் பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

Recommended Video

Superstar Rajinikanth தற்போதைய உடல்நிலை மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், நேற்று திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூப்பர்ஸ்டாருக்கு ஒன்றும் ஆகாது அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

நலமுடன் இருக்கிறார்

நலமுடன் இருக்கிறார்

சாதாரண செக்கப்பிற்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளன. மேலும், வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் ரஜினி நலமுடன் இருப்பதாக கூறினார் என்றும் அறிவிப்புகள் வெளியானதும் ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

அதே எனர்ஜியுடன் அண்ணாத்த விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என ஏகப்பட்ட ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரசிகர்களை போல சினிமா பிரபலங்களும் ரஜினி நலமுடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

திருஷ்டி பட்டிருக்கும்

திருஷ்டி பட்டிருக்கும்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியானதை அறிந்த ரசிகர்கள் ஒன்றும் ஆகாது என்றும் தாதா சாகேப் பால்கே விருது, அண்ணாத்த டிரைலர் ரிலீஸ் போன்ற காரணங்களால் சூப்பர்ஸ்டாருக்கு திருஷ்டி பட்டிருக்கும் அவ்வளவு தான். விரைவிலேயே தனது கம்பீர குரலால் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X