Dude OTT Trolls: தாலி என்னுது டோலி உன்னுது.. ஓடிடி ரசிகர்கள் டியூடை ஓடவிட்டு அடிக்கிறாங்களே!

சென்னை: அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி, பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, டிராவிட், சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் டியூட். இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை குவித்தது. வசூல் ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இப்படி இருக்கையில் படம் ஓடிடி தளத்தில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. படத்தை ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை குறித்து பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.

படத்தின் கதையை பொறுத்தவரையில் தனது மாமன் மகளான கதாநாயகி காதலைச் சொல்லும் போது ஒத்துக் கொள்ளாத கதாநாயகனுக்கு அதன் பின்னர் காதல் வருகிறது. ஆனால் அதற்கு தனது அத்தை மகனை மறந்து விட்டு வேறு ஒருவருடன் காதலில் இருக்கிறார். இது தெரியாமல் மாமன் மகள் மீது காதல் வயப்படும் கதாநாயகன், அவளை திருமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படி இருக்கும்போது, திருமணத்திற்கு முன் தினம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறும் கதாநாயகி, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். ஆனால் திருமணத்தை நிறுத்த முடியவில்லை.

Fans and Netizens Trolls and Reviews Pradeep Ranganathan Dude Movie After Its OTT Release
Photo Credit:

வித்தியாசமான கதை: தனது காதலன் கொடுத்த ஐடியாவை ஏற்று கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகி. தனது மனைவியான கதாநாயகியையும் அவரது காதலனையும் சேர்த்து வைக்க போராடுகிறார் கதாநாயகன். இதற்கிடையில் கதாநாயகி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவர, அந்த குழந்தைக்கு பெயரளவில் அப்பாவாக நடிக்கிறார். கடைசியாக கதாநாயகியையும் அவரின் காதலனையும் சேர்த்து வைக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை. இதற்கிடையில் ஆணவக் கொலைகளை கண்டித்து சில காட்சிகளை இடம் பெறச் செய்துள்ளனர்.

ஆணவக்கொலை: படத்தின் கதையை பொறுத்தவரையில் இந்தத் தலைமுறை இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் மற்றும் படக்குழுவினரை பலரும் பாராட்டினார்கள். இந்த படம் குறித்து சில எதிர்மறை விமர்சனங்கள் படம் தியேட்டரில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த போதே வந்தது. இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் போது சில இணையவாசிகள் படத்தின் கதை குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்.

Fans and Netizens Trolls and Reviews Pradeep Ranganathan Dude Movie After Its OTT Release
Photo Credit:

இணையவாசிகள்: இணைய வாசி ஒருவர், " வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம் னு பேரு வச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி தான் இந்த குப்பை. நல்ல படம் தியேட்டர் கிடைக்காம இருக்கு.ஆனால் இந்த குப்பை 100 கோடி. எல்லாரும் ஒரு பேரு வச்சாங்க. நாமளும் வைப்போம் "தாலி என்னுது டோலி உன்னுது". என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, " எதை வேணாலும் சொல்லுங்கடா...Best interval of this year னு மட்டும் தூக்கிட்டு வராதீங்கடா, கடுப்பு தான் ஆகுது" என்று பதிவிடுள்ளார். இது போல பல பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் இடைவேளை காட்சியில் எனது மானத்தை விட உனது உயிர் தான் முக்கியம் என்று பிரதீப் ரங்கநாதன் பேசும் வசனம் தமிழ் சினிமாவில் தலை சிறந்த வசனங்களில் ஒன்று. அந்த வகையில் இந்த படம் சிறந்த படம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X