twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா...ப்ளூசட்டை மாறனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

    |

    சென்னை : விக்ரம் படம் ஹிட் தான். ஆனால் பான் இந்தியா ஹிட் கிடையாது என ப்ளூசட்டை மாறன் போட்டுள்ள ட்விட்டால் கமல் ரசிகர்களும், நெட்டிசன்களும் கொந்தளித்து போய் உள்ளனர்.

    டாப் நடிகர்கள், அவர்களின் படங்களை அதிகம் விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன், சமீப காலமாக அஜித் பற்றிய அதிக விமர்சனங்களை முன் வைத்து, சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி வருகிறார்.

    வலிமை படத்திற்கு பிறகு அஜித் பற்றிய தகவல்கள், சமீபத்தில் அஜித் ஐரோப்பா டூர் போன போட்டோக்கள் ஆகியவற்றை வைத்து விமர்சனம் செய்தார். இதற்கு அஜித் ரசிகர்களும், நெட்டிசன்களும் திட்டி தீர்த்தனர்.

    இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு! இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

    முதலில் அஜித், இப்போ கமலா?

    முதலில் அஜித், இப்போ கமலா?

    அஜித் பற்றி பேசி, அஜித் ரசிகர்களை தான் இத்தனை நாட்களாக கடுப்பாக்கி வந்தார் ப்ளூசட்டை மாறன். இந்நிலையில் தற்போது விக்ரம் படம் பற்றி பேசி கமல் ரசிகர்களையும், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கடுப்பாக்கி உள்ளார். அதுவும் பிற மொழி சினிமாக்களுடன் விக்ரம் படத்தை ஒப்பிட்டு பேசி உள்ளது, பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    5 வாரங்களில் 500 கோடி வசூல்

    5 வாரங்களில் 500 கோடி வசூல்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள். கேஜிஎஃப் 2 பற்றி கடந்த 2 மாதங்களாக பேசி வந்தவர்கள் தற்போது விக்ரம் படத்தை பற்றியும், அதை உதாரணமாக சொல்லியும் தான் பேசி வருகின்றனர். 5 வாரங்களில் 500 கோடி கலெக்ஷனை விக்ரம் நெருங்கி வருகிறது. கடந்த 27 நாட்களில் விக்ரம் படம் உலகம் முழுவதும் 428 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    இரண்டாவது இடத்தில் விக்ரம்

    இரண்டாவது இடத்தில் விக்ரம்

    இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் ரஜினியின் 2.O படத்திற்கு பிறகு, கமலின் விக்ரம் படம் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் 2.O வசூல் சாதனையை கூட விக்ரம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள். விக்ரம் பற்றிய பல விஷயங்கள் ரசிகர்கள் தற்போதும் ஆர்வமாக பகிர்ந்து, வியந்து வருகின்றனர்.

    விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா

    விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா

    இந்த சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், பான் இந்தியா ஹிட்ஸ் - ஆர்ஆர்ஆர் (தெலுங்கு), கேஜிஎஃப் 2 (கன்னடம்), தி காஷ்மீர் ஃபைல்ஸ் (இந்தி). பான் சவுத் இந்தியா ஹிட் - விக்ரம் (தமிழ்). கேரளா மற்றும் கோலிவுட் சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து இதுவரை பான் இந்தியன் ஹிட் கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் அல்லது வேறு ஏதாவது படம் கொடுக்குமா? என பதிவிட்டுள்ளார்.

    இந்தியிலேயே விக்ரம் ஹிட்

    இந்தியிலேயே விக்ரம் ஹிட்

    ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என விக்ரம் படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்தியில் கூட விக்ரம் படம் ஹிட். 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட விக்ரம் இந்தி வெர்சன் 10 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்கள் 100 சதவீதம் லாபத்தை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் ரிலீசான 27 நாட்களில் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்கள் மட்டுமே 500 கோடி வசூலை கடந்தன. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் 248 கோடிகளை மட்டுமே வசூல் செய்தது.

    காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட்டா

    காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட்டா

    ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கோபத்தில் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர். இந்தி படங்கள் பான் இந்தியா ஹிட். இந்தி படங்கள் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஓடுவதில்லை. சமீபத்தில் ஒரு இந்தி படம் கூட வசூல் சாதனை படைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் படங்கள் வெற்றி பெற தனித்தனி காரணங்கள் உண்டு. ஒருவேளை ஆன்டிஇந்தியன் 2 பான் வேர்ல்ட் படமாக இருக்கும் போல. இப்போது வரை தமிழ் படங்கள் பலவும் எந்தவித சோஷியல் மீடியா சப்போர்ட்டும் இல்லாமல் பெரிய தொகையை வசூல் செய்து வருகின்றன.

    Recommended Video

    RJ Balaji | Blue Sattai Maran-க்கு சரியான பதிலடி! *Kollywood
     30 வருஷத்துக்கு முன்னாலயே நாங்க பண்ணிட்டோம்

    30 வருஷத்துக்கு முன்னாலயே நாங்க பண்ணிட்டோம்

    வெளிநாடுகளில் தமிழ் படங்களை போல் வேறு எந்த மொழி படமும் வசூலை குவிப்பதில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட்டா. நாம 30 வருஷத்துக்கு முன்னாலயே ரோஜா, மும்பை, இந்தியன்னு பான் இந்தியா ஹிட் கொடுத்தாச்சு. கோலிவுட்டின் முதல் ஃபான் இந்தியா படம் அபூர்வ சகோதரர்கள், இரண்டாவது படம் இந்தியன், இரண்டுமே கமல் படங்கள் தான். சர்ச்சைகள் கிளம்பிய பிறகு தான்டா காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வந்ததே பல பேருக்கு தெரியும் என திட்டி கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Blue Sattai Maran listed out in his latest tweet that RRR, KGF 2,Kashmir Files are only pan indian hit movies. Vikram is Pan south indian hit movie. Kerala and Kollywood industries are yet to deliver pan indian hit movie. Will it be Ponniyin Selvan or some other film. Kamal fans and Vikram movie fans upset on this tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X