Aadai: செம போல்ட்.. விரசமேயில்லை... அமலாபாலுக்கு ஒரு குடாஸ்.. - டிவிட்டர் விமர்சனம்!
ஆடை திரைப்படத்தை டிவிட்டரில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சென்னை: அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படத்தை டிவிட்டரில் ரசிகர்கள் பாராட்டி விமர்சித்து வருகின்றனர்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நேற்று மாலை ரிலீசானது. அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஆடை இருக்கிறது. இதற்கு காரணம் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது தான்.
நேற்று மாலைக் காட்சியை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.
தியேட்டருக்கு லேட்டா போகாதீங்க
சினிமா பிரியரான கவுசிக், "டைட்டில் கார்டை மிஸ் பண்ணாதீங்க. தியேட்டருக்கு லேட்டா போய்டாதீங்க. இந்த படத்தின் இடைவெளி காட்சி, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராதது. ஊர்கா பேண்டோட இசை அருமை" என பாராட்டியுள்ளார்.
வலிமையான படம்:
‘நிச்சயம் இது ஒரு தைரியமான முயற்சி. போஸ்டரை பார்த்து மட்டும் படத்தை தீர்மானிக்க வேண்டாம். படத்தில் நல்ல வலிமையான, ஆழமான கருத்து உள்ளது. ஆபாசமோ, கவர்ச்சியோ இல்லை' எனப் பாராட்டியுள்ளார் இந்த ரசிகர்.
அமலாவுக்கு பாராட்டு:
‘நிச்சயம் பாராட்டுகளுக்கு உகந்த படம். பிராங்க் என்ற பெயரில் மற்றவர்கள் மனதை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. அமலாபாலும், ரம்யாவும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்' என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

எதிர்ப்பவர்கள் பாராட்டுவாங்க
இதற்கிடையே தனது படத்தை விமர்சிப்பவர்களும் கூட படத்தைப் பார்த்த பிறகு மனம் உவந்து பாராட்டுவார்கள் என நடிகை அமலா பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











