ரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை!

Recommended Video

Metti Oli Boss Venkatயின் அடுத்த அவதாரம் | Kanni Maadam

சென்னை: நேற்று வெளியான கன்னி மாடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் வெகுவாக படத்தை பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் இயக்குனர் போஸ் வெங்கட் தான். அவரது உழைப்பு மற்றும் அவர் திரைக்கதையை கையாண்ட விதம் என அனைத்தும் பாராட்டும் வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது போன்ற படங்களை இவர் மேலும் மேலும் இயக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இது போஸ் வெங்கட்டின் கன்னி முயற்சியிலேயே அவர் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் அவரின் உழைப்பு வீணாகவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 படத்திற்கு ப்ளஸ்

படத்திற்கு ப்ளஸ்

இப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் இனியனின் ஒளிப்பதிவு தான். ஆட்டோ ஸ்டாண்டு, வீடுகள், தெருக்களில் இது போன்ற இடங்களில் கஷ்டப்பட்டு காட்சி படுத்தியுள்ளார். இயக்குனர் மனதில் நினைத்ததை அவர் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அழகாக கையாண்டு உள்ளார் ஒளிப்பதிவாளர் இனியன். மேக்கிங் பார்க்கும் பொழுது தெரிந்த அவரது வேலை படம் பார்க்கும் பொழுது இருமடங்காக தெரிந்தது என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 மூனு காலு வாகனம்

மூனு காலு வாகனம்

படத்தில் பின்னணி இசையும் மிகவும் பிரமாதமாக இருந்தது. சில காட்சிகளில் அந்த இசை தான் காட்சியை தாங்கி பிடித்து இருக்கிறது. ஹரி சாய் இசை பிரமாதம் என்பதே ரசிகர்கள் கருத்து மற்றும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு அந்தெம் இருக்கும், சிம்பு லவ் அந்தெம், தனுஷ் சச்சின் அந்தெம் அந்த வரிசையில் ஒரு ஆட்டோவை வைத்து ஒரு பாடல் இந்த பாடல் டிரெண்டாக உள்ளது.

 ரோபோ சங்கர் பாட்டு

ரோபோ சங்கர் பாட்டு

இதனை ரேபோ சங்கர் பாடியுள்ளார். பாட்ஷா படத்தில் வரும் நான் ஆட்டோக்காரன் பாடலுக்கு அடுத்து அதே போன்ற பாடல் தற்போது கிடைத்துள்ளது. ஆட்டோ ஒட்டுனர்கள் ரஜினிக்கு பின்னர் இது போன்ற பாடலை படத்தில் வைத்ததற்காக போஸ் வெங்கட்டை பாராட்டி வருகின்றனர். தயாரிப்பாளர் ஹஷீர் இதற்கு முன் இவர் வண்டி என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். கன்னி மாடம் என்ற போஸ் வெங்கட்டின் கனவு திரைப்படமாக உருவாக மிகவும் முக்கியமான ஒருவர். இவர் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கி வருகிறார்.

 சினிமாவின் மீது காதல்

சினிமாவின் மீது காதல்

சினிமாவின் மேல் உள்ள காதலால் பலரின் கனவை நிறைவேற்றுபவர் தான் இந்த ஹஷீர். படத்தில் கதை திரைக்கதை இருந்தால் போதும் தனது முழு உழைப்பை கொடுத்து படத்தை தயாரித்து கொடுக்கிறார். நிச்சயமாக இது போன்ற படங்களை தயாரிக்கும் இவர் சிறிது காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்வார் என்பது நிதர்சனமான உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X