»   »  கூலிங் கிளாஸை பார்க்கச் சொன்னா நடிகையின் இடுப்பை பார்த்த நெட்டிசன்ஸ்

கூலிங் கிளாஸை பார்க்கச் சொன்னா நடிகையின் இடுப்பை பார்த்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ராவின் இடுப்பை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தியும் அக்கா வழியில் நடித்துக் கொண்டிருக்கிறார். பூசினாற் போன்று இருந்த பரினீத்தி ஒர்க் அவுட் செய்து, டயட்டில் இருந்து எடையை குறைத்துவிட்டார்.

ஒல்லியாகியுள்ள அவர் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

பரினீத்தி தனது கூலிங் கிளாஸ் பற்றி எழுதி தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களோ அவரது கூலிங் கிளாஸை கவனிக்கவில்லை மாறாக வேறு ஒரு விஷயத்தை கவனித்துள்ளனர்.

துணிச்சல்

துணிச்சல்

பரினீத்தி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் இடுப்பு தெரிகிறது. அதில் ஸ்ட்ரெச் மார்க் உள்ளது. நடிகைகள் ஸ்ட்ரெச் மார்க்கை மறைக்க படாதபாடு படும்போது பரினீத்தி துணிச்சலாக அதை காட்டியுள்ளதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

சூப்பர்

சூப்பர்

ஸ்ட்ரெச் மார்க்ஸ் அசிங்கம் கிடையாது. அதுவும் அழகே. ஸ்ட்ரெச் மார்க்ஸை மறைக்க முயற்சி செய்யாத பரினீத்தியை வாழ்த்துகிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 கூலிங் கிளாஸ்

கூலிங் கிளாஸ்

அந்த அம்மணி கூலிங் கிளாஸுக்கு விளம்பரம் கொடுக்க புகைப்படம் வெளியிட ரசிகர்களோ அவரின் இடுப்பில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Netizens are appreciating Bollywood actress Parineeti Chopra for proudly showing her stretch marks. She posted a picture of hers on instagram with a caption, “Bright blue sunglasses for life!!!? thanks for these beautiess!!''

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil