Don't Miss!
- News
விவேக்கின் "அந்த" கடைசி ஆசை.. இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கலந்து விட்ட சோகம்!
- Automobiles
மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான இ-ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பாக்கலாம்!
- Lifestyle
லாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Finance
நாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..!
- Sports
இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனசு நிறைய மகிழ்ச்சி வழியுது.. செம நெகிழ்ச்சியில் கீர்த்தி பாண்டியன்!
சென்னை : அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறி உள்ளார் கீர்த்திபாண்டியன். தற்போது படம் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். இதனால் ஏகத்திற்கும் குஷியில் இருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
அப்பா கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி உள்ள அருண்பாண்டியன், கன கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வரும் பல காட்சிகளில் ரசிகர்களின் கைத்தட்டல்களை திரையரங்குகளில் கேட்க முடிகிறது.
என்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது.. சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்.. ஆடிப்போன ஃபேன்ஸ்!
இயக்குனர் கோகுல் தன் பங்கிற்கு ட்விஸ்ட், த்ரில் என படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது அன்பிற்கினியாள் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

அட்வெஞ்சர் மூவி
அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வெஞ்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விருப்பி ரசித்தனர்.

எதிர்பார்ப்பு அதிகம்
ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோசூட்டால் இணையத்தை திட்டாட விட்ட இடையழகி ரம்யா பாண்டியனின் உறவுக்கார பெண் தான் கீர்த்திப்பாண்டியன். அக்கா ரம்யா பாண்டியன் போல இடையழகில் கவர்ச்சி காட்டாவிட்டாலும் நடிப்பில் தன் தந்தையைப்போல மிரட்டி உள்ளார் கீர்த்திப்பாண்டியன்.

ரசிக்கும் படி
மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தை அழகாக ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் கோகுல், அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று அனைவரையும் யோசிக்க வைத்து அனைவரையும் காட்சிக்கு காட்சி திகிலூட்டி உள்ளார் இயக்குனர்.

படத்துக்கு பிளஸ்
அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸே உண்மையான அப்பா, மகள் நடித்ததுதான். அப்பாவாக அருண்பாண்டியனும், மகளான கீர்த்திபாண்டினும் நடித்தது பார்ப்பதற்கு ரசிக்கும் படி இருந்தது. இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டக்காட்சிகள் படத்திற்கு வெற்றியாக அமைந்துள்ளது.

மகிழ்ச்சி
தும்பா படத்தில் வெறுவிதமான பெண்ணாக தெரிந்த கீர்த்திப்பாண்டியன் இப்படத்தில் குடும்பத்திற்காக வேலை தேடும் பெண்ணாக நடித்திருக்கிறார். தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்போது இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஹாப்பி பேஸ் என பதிவிட்டுள்ளார்.