தேர்வு தான் முக்கியம் மாயநதி கௌசல்யா செந்திலின் முடிவு

சென்னை : அறிமுக இயக்குனர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மாயநதி, இந்த படம் சரியாக ஜனவரி 31 வெளியாகி மக்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது .இந்த படம் முக்கியமாக எடுத்து கூறிய கருத்து மாணவர்களின் கல்வி பற்றி தான்.

தற்போது மாயநதி படத்தின் முக்கியமான படக்காட்சி ஒன்று ஸ்நீக் பீக்காக வெளியிடபட்டுள்ளது .இதில் அப்புக்குட்டி மற்றும் அபிசரவணன் மேலும் வெண்பா இடம்பெறும் காட்சிகள் வெளியிடபட்டிருக்கிறது .செந்திலாக அபிசரவணனும் கௌசல்யாவாக வெண்பாவும் நடித்து இருக்கின்றனர் .

Fans are celebrating Maayanadhi movie and its special scene

காதல் வேண்டாம் நீ ஆட்டோ ஓட்டுனர், அவ படிச்சுட்டு இருக்கா என அறிவுரை கூறும் நண்பன் அப்புக்குட்டி,அதையும் மறுத்து காதல் தான் முக்கியம் என நினைக்கும் செந்தில் மேலும் அவ படிச்சு முடிச்சு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வாள் என அப்புக்குட்டி கூற செந்திலுக்கு காதல் கண்ணை மறைக்க தனது நண்பனை அடிக்கிறான்.

Fans are celebrating Maayanadhi movie and its special scene
மேலும் கௌசல்யாவும் தேர்வு முடியும் வரை சந்திக்க வேண்டாம் என கூற அங்கும் காதலுக்காக கோவப்படுகிறான் செந்தில் .இறுதியில் கௌசல்யா தெளிவாக செந்தில்லுக்கு புரிய வைக்கிறாள் .இருவரும் இதுதான் சரி தேர்வு வரை காதல் வேண்டாம் என ஒத்தி வைக்கிறார்கள் .
Fans are celebrating Maayanadhi movie and its special scene
படம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் இருக்கிறது .இருவரும் தங்களின் காதலை படிப்புக்காக அதிக படியாக தியாகம் செய்வார்கள் .இப்படி பல படங்களிள் காட்சிகள் அமைந்திருக்காது .படத்தின் இயக்குனரான அசோக் தியாகராஜன் கூறுகையில் இதை தான் குறிப்பிட்டு இருந்தார் .மாணவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் பள்ளி பருவத்தில் வந்தாலும் அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் மாயநதி படம் என்று.

மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் அவர்களின் குழப்பம் பற்றியும் மாயநதி தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறது .இந்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி அமைத்த இசையும் பலரை கவர்ந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X