Mayilsamy: உதவ பணம் தேவையில்லை.. மனசு போதும்.. வாழ்ந்து காட்டிய மயில்சாமியின் பிறந்த நாள் இன்று!

சென்னை: தனது நகைச்சுவையான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த காமெடி நடிகர் மயில்சாமியின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் அவரது போட்டோவிற்கு மாலை அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய மயில்சாமி விஜய்யின் கில்லி படத்தில் சிறப்பான ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

Fans are celebrating the birthday of late comedian Mayilsamy

இவர் நடிகராக மட்டுமில்லாமல், உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யக்கூடிய மனம் கொண்டவர்

மயில்சாமி: 1984ம் ஆண்டு வெளியான பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக திரைத்துறையில் நுழைந்த மயில்சாமிக்கு அடுத்த ஆண்டே கன்னிராசி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசனின் நண்பராகவே கலக்கினார் மயில்சாமி. ரஜினிகாந்தின் பணக்காரன் படத்தில் நடித்த மயில்சாமி அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

வடிவேலு, விவேக்: அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மயில்சாமி விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தார். அதன் பின்னர் கில்லி படத்தில் லைட் ஹவுஸ் நாராயணன் எனும் சிறப்பான கதாபாத்திரம் மயில்சாமிக்கு கிடைத்தது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்.

Fans are celebrating the birthday of late comedian Mayilsamy

தீவிர சிவபக்தர்: சென்னையில் விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் மயில்சாமி தீவிர சிவ பக்தர் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம், சிவராத்திரி விழாவில் விடிய விடிய கண்விழுத்திருந்த மயில்சாமி அதிகாலை வீட்டிற்கு வரும் வழியில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மனதில் வாழும் மயில்சாமி: மயில்சாமி தனது உதவும் நல்ல பண்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். உதவி செய்ய பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும் என்ற மனம் கொண்ட மயில்சாமியின் பிரிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கவைத்தாலும், இல்லை என்று வந்தவர்களுக்கு அவர் செய்த உதவியின் மூலம் பலரின் மனதில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X