போன வாரம் எட்டிப் பார்த்தார்… இப்போ பாத்ரூம் உள்ளேயே போய்ட்டார்: அமுதவாணனை விளாசும் நெட்டிசன்கள்

சென்னை: விஜய் டிவியில் அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 54வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடிகள் என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்ற வாரம் பெண் குளிப்பதை பாத்ரூம் வெளியே நின்று எட்டிப் பார்த்து சர்ச்சையில் சிக்கிய அமுதவாணன், இந்த வாரம் ஒரு போட்டியாளருடன் பாத்ரூம் உள்ளேயே சென்றுவிட்டார்.

அமுதவாணனின் அட்ராசிட்டி

அமுதவாணனின் அட்ராசிட்டி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடிகள் என்ற டாஸ்க் நடைபெற்றது. இதனிடையே லக்‌ஷூரி பட்ஜெட், எவிக்சன் நாமினேஷன் என தனிநபர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் அமுதவாணன் செய்த அட்ராசிட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அசீமுடன் சண்டை

அசீமுடன் சண்டை

ஏலியன்ஸ் - பழங்குடிகள் போட்டி ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, போட்டியாளர்களுக்கு பூட்டுப் போடும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதில், அமுதவாணனுக்கு இரண்டு பூட்டுகள் கொடுக்கப்பட்டன. அதில் ஒன்றை அசீமுக்கு மாட்டிவிட்டார் அமுதவாணன். அதற்கு முன்னர் தான் அசீம் அமுதவாணனின் கழுத்தில் கையை வைத்ததால், இருவருக்கும் இடையே மோதல் உருவானது. அதன்பின்னர் இருவரும் சேர்ந்து நடத்திய மர்ம நாடகமும் நடத்தினர்.

பாத்ரூம் உள்ளே சென்ற அம்மு

பாத்ரூம் உள்ளே சென்ற அம்மு

இதனிடையே இன்னொரு பூட்டை விக்ரமனுக்கு மாட்டி விட முயன்றார் அமுதவாணன். அவரும் அமுதவாணனிடம் சிக்காமல் அங்குமிங்கும் ஓடினார். இறுதியாக இருவருக்கும் இடையே டீல் பேசிக்கொண்டிருந்த போது, விக்ரமன் பாத்ரூம் செல்ல வேண்டும் எனக் கூறினார். ஆனால், அமுதவாணன் அவரை விடாமல் பூட்டு மாட்டுவதிலேயே குறியாக இருந்தார். அப்போது விக்ரமன் கண்டிப்பாக பாத்ரூம் போக வேண்டும் என சொல்ல, அமுதவாணனும் அவருடன் சேர்ந்து உள்ளே போய்விட்டார். இதை பார்த்து அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணனின் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. பெண் போட்டியாளர் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அமுதவாணன் கதவு ஓரமாக நின்று எட்டிப் பார்த்து மைக் மாட்டாமல் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பிக் பாஸும் மைக்கை மாட்டிக்கொண்டு பேசுங்க அமுதவாணன் என சொல்லவும் தான், அவர் அங்கிருந்து நகர்ந்தார். பெண் போட்டியாளர் குளித்ததை எட்டிப் பார்த்தது கமலின் முன்னால் பஞ்சாயத்துக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், அது ஒன்றுமில்லாமல் போனது. இப்போது விக்ரமனுடன் பாத்ரூம் உள்ளே சென்று மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் அமுதவாணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X