Vijay - விஜய் உங்களுக்கு சூர்யா எவ்வளவோ பரவால்லைங்க.. தளபதியை விளாசும் ரசிகர்கள்

சென்னை: Vijay(விஜய்) சூர்யா செய்த செயலை வைத்து பலரும் விஜய்யை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ரஜினி, கமல் ஆகியோரின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றியை பெற்றவர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சினிமாவில் கஷ்டப்பட்டே வளர்ந்தவர். அதனால்தான் தான் வளர்ந்த பிறகு கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.

Fans are criticized Vijay in Vijayakanth Health Issue

அன்னமிட்ட கை: விஜயகாந்த் என்றால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று நினைவுக்கு வருவதை போல உதவி, அன்னமிட்ட கை என்பதும் நினைவுக்கு வரும். விஜயகாந்த் ஆஃபிஸ் போனால் போதும் வயிறார சாப்பிட்டுவிட்டு வரலாம் என்பதுதான் 80கள், 90களில் சினிமாவுக்குள் போராடிக்கொண்டிருந்தவர்களின் எண்ண ஓட்டம். அதனாலேயே அவர் மீது பலரும் மரியாதை வைத்திருக்கின்றனர்.

ஓடோடி வரும் கேப்டன்: வெறும் உணவிட்டு உதவி செய்வது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பல உதவிகளை, நல்லதை செய்திருக்கிறார் அவர். சிவாஜி இறப்பின்போதுகூட யாருக்கும் அஞ்சாமல் கூட்டத்துக்குள் சென்று அந்தக் கூட்டத்தை அரட்டி அடக்கி வைத்தவர் விஜயகாந்த். அதுதொடர்பான வீடியோக்கூட சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டானது.

விஜய்க்கு உதவிய விஜயகாந்த்: அதேபோல் இப்போது டாப்பில் இருக்கும் விஜய்க்கு அவரது ஆரம்பகாலத்தில் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். அதாவது விஜய்யை விஜயகாந்த்தோடு சேர்ந்து நடிக்க வைத்தால் விஜய்க்கு பிரபல்யம் கிடைக்கும் என முடிவு செய்த எஸ்.ஏ.சி; அதனை விஜயகாந்த்திடம் சொல்ல கேப்டனோ உடனடியாக ஒத்துக்கொண்டார்.

சூர்யாவுக்கும்: அதேபோல் சூர்யாவின் ஆரம்பகாலத்திலும் பெரியண்ணா படத்தில் நடித்துக்கொடுத்தார். இப்படி வளரும் கலைஞர்களுக்கு தொடர்ந்து உதவி செய்த விஜயகாந்த் இப்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும், விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என ட்வீட் செய்திருந்தார்.

எங்கே விஜய்?: இந்நிலையில் சூர்யா போட்டிருக்கும் ட்வீட்டை வைத்து விஜய்யை ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர். அதாவது, விஜய் விஜயகாந்த்தை நேரில் சென்றுகூட பார்க்க வேண்டாம். ஒரு ட்வீட்டைக்கூடவா போட முடியாது. தனது ஆரம்பகாலத்தில் தனக்கு உதவி செய்த ஒருவர் இப்படி மருத்துவமனையில் இருக்கும்போது விஜய் அமைதியாக இருப்பது அழகாக இல்லை என்றும் ஓபனாகவே கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X