விஜயகாந்த் உடல்நிலை..எட்டிக்கூட பார்க்கலையே விஜய்.. இதெல்லாம் நியாயமா தளபதி.. ரசிகர்கள் கடும் விமர்சனம்

சென்னை: Vijay (விஜய்) விஜய்காந்த்தை விஜய் சென்று பார்க்காததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது படங்களின் வியாபாரம் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கு மேல் செல்கிறது. எனவே அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Fans are criticizing Vijay because Vijay did not See Vijayakanth

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

விமர்சனம்: வசூல் ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக அடிவாங்கியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்ததாக அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் தளபதி 68 படத்தின் மீது பலரின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது.

தளபதி 68: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிக்கொண்டிருக்கும் தளபதி 68ஐ ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் இப்போது துருக்கியில் நடந்துவருகிறது.

விஜயகாந்த் செய்த உதவி: இப்படி விஜய் படுபிஸியாக படங்களில் நடித்துவருகிறார். ஆனால் அவரது ஆரம்பகாலத்தில் ரொம்பவே தடுமாறியவர். அதுமட்டுமின்றி பல விமர்சனங்களையும் சந்தித்தவர். அப்படி விஜய் தடுமாறியபோது விஜயகாந்த் பீக்கில் இருந்தார். எனவே அவருடன் விஜய்யை நடிக்க வைத்தால் ரசிகர்களிடம் மேலும் அடையாளப்படுவார் என்று யோசித்த எஸ்.ஏ.சந்திரசேகர் செந்தூரப்பாண்டி படத்தை எடுத்தார்.

இந்தப் படத்துக்காக டேட் கேட்க எஸ்.ஏ.சி ஃபோன் செய்து நான் நேரில் வருகிறேன் விஜயகாந்த் என்று கூற; விஜயகாந்த்தே நேரில் வந்து விஷயத்தை அறிந்திருக்கிறது. அதனையடுத்து, எத்தனை நாட்கள் டேட் வேண்டும் டைரக்டரே என்று கேட்டுவிட்டு தம்பிக்காக இதைக்கூட செய்யமாட்டேனா என சொல்லி அந்தப் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகி விஜய்யை மேலும் அடையாளப்படுத்தியது.

நன்றி மறந்த விஜய்?: இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னும் சில வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் விஜய் மீது ரசிகர்கள் ஒரு விமர்சனத்தை வைத்துவருகின்றனர். அதாவது விஜயகாந்த் கிட்டத்தட்ட 5 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

ஆனால் விஜய்யோ ஒருமுறைகூட நேரில் சென்று சந்திக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் விஜய்காந்த் சீரியஸ் கண்டிஷனில் இருக்கும்போதுகூட நேரில் சென்று விசாரிக்கவில்லை. குடும்பத்தாரிடமும் தொடர்புகொண்டது போல் தெரியவில்லை. விஜய் ஏன் இப்படி இருக்கிறார். தனக்கு உதவியவருக்கு சிறு நன்றியுடன்கூடவா இருக்கக்கூடாது என காட்டமாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X