Vijayakanth - நடிகைக்கு பாலியல் தொல்லை.. துணை போனாரா விஜயகாந்த்?.. ரசிகர்கள் ஆரம்பித்த புது பஞ்சாயத்து

சென்னை: Vichithra (விசித்திரா) பிக்பாஸில் விசித்திரா சொன்ன கதையை அடுத்து ரசிகர்கள் பல்வேறு விஷயங்களை சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

நடிகை விசித்திரா 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். காமெடி மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்து வந்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் ஒதுங்கியே இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி சில சீரியல்களில் நடித்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Fans are criticizing Vijayakanth in the case of sexual harassment of Vichithra

பிக்பாஸ் 7: அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறது. ஒரு வாரம்தான் தாக்குப்பிடிப்பார் என்று பலரும் விசித்திராவை பார்த்து கூறினர். ஆனால் இன்றுவரை வீட்டுக்குள் அவர் இருந்துவருகிறார். குறிப்பாக தனக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் பேசியபோது அதனை அசால்ட்டாக டீல் செய்த விதம் அவருக்கு நல்ல பெயரை ரசிகர்களிடையே பெற்று தந்திருக்கிறது.

பூகம்ப கதை: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பூகம்ப டாஸ்க்கில் விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அது திரையுலகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அப்போது பேசுகையில், "முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதற்காக முதல் நாள் சென்றேன்.

பெயரைக்கூட கேட்கவில்லை: ஆனால் அவரோ என் பெயரைக்கூட கேட்காமல் இன்னைக்கு நைட் என் ரூமுக்கு வந்துடு என்றார். நான் அன்றைய இரவு அவர் ரூமுக்கு செல்லாமல் என்னுடைய ரூமுக்கு வந்து தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு அவருடைய ஆட்கள் மது அருந்திவிட்டு வந்து எனது அறை கதவை தட்டினார்கள். இதனை கவனித்துக்கொண்டிருந்த அந்த ஹோட்டலின் மேனேஜர் (தற்போது விசித்திராவின் கணவர்) எனக்கு உதவி செய்தார்.

ஒவ்வொரு நாளும் ஒரு ரூம்: அதன்படி அவர் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார். அதனால் நான் எந்த ரூமில் இருக்கிறேன் என ஹீரோவுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தெரியவில்லை. இதுவும் ஹீரோவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த சமயத்தில் ஆக்‌ஷன் காட்சி ஷூட் செய்யப்பட்டது. அந்த ஷூட்டிங்கில் சண்டை கலைஞர் ஒருவர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் சண்டை பயிற்சியாளரிடம் சென்றுமுறையிட்டேன். அவர் என்னை அறைந்துவிட்டார்.

ஷூட்டிங் கேரளாவில் நடந்தது. நமது நடிகர் சங்கத்திடம் முறையிட்டேன். ஆனால் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்தவர் மறந்துட்டு வேலையை பாரும்மா என்றார். சங்கத்தின் செயலாளரோ நீங்க போலீஸ்ட்டதானே போகணும். ஏன் சங்கத்துக்கு வந்தீங்க என கேட்டார். அதனையடுத்துதான் நான் சினிமாவிலிருந்து விலகினேன்" என்றார்.

விசித்திராவின் இந்த பேச்சை கேட்ட பிறகு யார் அந்த ஹீரோ என்ற தேடலில் இறங்கி அந்தப் படம் பலேவடிவி பாசு என்கிற தெலுங்கு படம் ஹீரோ பாலகிருஷ்ணா, சண்டை பயிற்சியாளர் விஜய் என நெட்டிசன்ஸ் தொடர்ந்து கூறிவருகின்றனர். மேலும் அவருக்கு எதிராக தங்களது கண்டனத்தையும் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் புதிய பஞ்சாயத்தையும் அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். அதாவது 2001ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவர்தான் விசித்திராவிடம் இதையெல்லாம் மறந்துட்டு வேலையை பாரும்மா என்று சொல்லியிருக்க வேண்டும். ஆக ஒரு தலைவராக நடிகைக்கு விஜயகாந்த் துணை நிற்கவில்லை.

ஆனால், மறந்துவிடு என்று பொது சிந்தனையோடு பேசியிருக்கிறார். இதுவும் பாலியல் தொல்லைக்கு துணை போவது மாதிரிதான். நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் மீது இத்தனை வருடங்களில் இதுவே முதல் விமர்சனமாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X