பேசாம அந்த "புஜ்ஜி"யை வச்சிருக்கலாம்.. ஜாலியா டான்ஸாச்சும் பாத்திருக்கலாம்... ஏக்கத்தில் ரசிகர்கள்!

சென்னை : ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் பாடிய என்ன மட்டும் லவ்யூ பண்ணு பூஜ்ஜி பாடல் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குடும்ப படங்களை இயக்கி பிரபலமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் விஜய் சேதுபதியை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். இது ஒருவித்தியாசமான பேய் திரைப்படமாகும். இத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

வெற்றிப்படம்

வெற்றிப்படம்

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா, இறைவி மற்றும் ரஜினிகாந்தை வைத்து பேட்ட போன்ற திரைப்படங்களை இயக்கினார். ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக நீண்டநாள் காத்திருந்தோம், ஆனால் நீண்ட நாள் காத்திருப்பை இப்படம் பூர்த்திசெய்யவில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

Recommended Video

Blue Sattai Maran -க்கு YouTube வைத்த ஆப்பு | Jagame Thanthiram Tamil Talkies
எதிர்பார்த்தது இல்லை

எதிர்பார்த்தது இல்லை

தனுஷ் ரசிகர்களுக்கு மன நிறைவான திரைப்படமாக இப்படம் அமையவில்லை. அசுரன், கர்ணன் என மாஸ் திரைப்படத்தை கொடுத்து ஒரு மாஸ் ஹீரோவான தனுஷ் ரசிகர்களை ஜகமே தந்திரம் ஏமாற்றி விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இப்படத்தின் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் படத்திற்கு முன்பாகவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ரகிட ரகிட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. அதே போல விவேக்கின் பாடல் வரிகளில் அனிருத் பாடிய என்ன மட்டும் லவ்யூ பண்ணு பூஜ்ஜி பாடலும் ஹிட்டானது. ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை. இந்த பாடல் படத்தில் வராது என்று கூறியிருந்தாலும் இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. படத்தின் இறுதியிலாவது இந்த பாடலை போட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X