ரூ. 1800 கோடி நடிகை.. ஒரு வருசமா ஆளையே காணோம்.. என்னதான் ஆச்சு? தரிசனத்துக்காக ஏங்கும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் என்பது குறைவுதான். வெகு சில இயக்குநர்கள் மட்டுமே கதாநாயகிகளை முக்கியத்துவப்படுத்தும் படங்களை உருவாக்குகின்றார்கள். அதேபோல் கதாநாயகனுக்கு கொடுக்கும் அதே அளவுக்கான முக்கியத்துவம் கதாநாயகிக்கும் கொடுக்கும் இயக்குநர்களும் குறைவுதான். கதாநாயகிகளை முக்கியத்துவம் செய்து படங்களை எடுத்தால் அவை வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்ற தயக்கம் பலருக்கும் இருப்பதால், கதாநாயகியை மையப்படுத்திய படங்களை மிகக் குறைவான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஓ.கே செய்கின்றனர். இப்படியான நிலையில் தனது அசாத்திய நடிப்பினால் இந்திய சினிமாவில் முதல் 500 கோடிகளை வசூலித்த புகழுக்கும் முதல் 1000 கோடிகளை வசூலித்த புகழுக்கும் சொந்தக்காரராக மாறிய நடிகை அனுஷ்கா குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இப்படியான நிலையில் தனது அசாத்திய நடிப்பினால் இந்திய சினிமாவில் முதல் 500 கோடிகளை வசூலித்த புகழுக்கும் முதல் 1000 கோடிகளை வசூலித்த புகழுக்கும் சொந்தக்காரராக மாறிய நடிகை அனுஷ்கா குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

anuashka shetty anuashka shetty health baahubali

கடந்த 2005ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. தனது அட்டகாசமான நடிப்பினால், தென்னிந்திய திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகையாக உருவானார். கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை அனுஷ்கா இருந்தால் தைரியமாக களத்தில் இறங்கலாம் என, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதேபோல், அருந்ததி, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்கள் மூலம் வெற்றி வாகை சூடியவர் அனுஷ்கா.

பாகுபலி படத்தினை திரையில் கொண்டாடிய ரசிகர்களில் பலர் பிரபாஸ்க்காக படத்தினைக் கொண்டாடினார்கள் என்றால், பலர் அனுஷ்காவுக்காக படத்தினைக் கொண்டாடினார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் வசூல் என்பது தென்னிந்திய திரையுலகம் மட்டும் இல்லாமல், இந்தியத் திரையுலகமே யோசிக்காத விஷயம். அப்படியான நிலையில் அந்தப் படத்தில் அட்டகாசமான அதேநேரத்தில் பிரபாஸ்க்கு சவால் அளிக்கு வகையில் நடிப்பினை வெளிப்படுத்திய நடிகையாக இருந்தார் அனுஷ்கா.

anuashka shetty anuashka shetty health baahubali

அனுஷ்கா: அதேபோல் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ரூபாய் 1800 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. அதில் அனுஷ்காவின் பங்கும், ஏற்படுத்திய எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. இந்தப் படத்திற்கு முன்னரே நடிகை அனுஷ்கா பிரபாஸ் உடன், பில்லா படத்தின் ரீ மேக்கில் நடித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். பாகுபலி படத்திற்குப் பின்னர் இருவரும் காதலித்து வருவதாக, கிசு கிசுக்கள் எழுந்தது. இந்த கிசு கிசுக்கள் இப்போதுவரை அவ்வப்போது எதாவது ஒரு வகையில் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் பாகுபலி படம் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவை பான் இந்தியா ஸ்டார்களாக மாற்றியது.

ஒரு வருஷம்: பிரபாஸ் மட்டும் இல்லாமல், நாகர்ஜுனா மற்றும் கோபிசந்த் ஆகியோருடனும் அனுஷ்கா டேட் செய்து வருகின்றார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் தெலுங்கு சினிமா உலகில் வேகமாக பரவியது. ஆனால் தன் மீதான கிசுகிசுக்களுக்கு அனுஷ்கா எங்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் தனது, அட்டகாசமான நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படம்தான்.இந்தப் படமும் கடந்த ஆண்டு வெளியானது. அதன் பின்னர் அனுஷ்கா நடிப்பில் உருவாகும் படங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டும் வெளியாகின்றது. ஆனால், படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் அனுஷ்காவுக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

anuashka shetty anuashka shetty health baahubali

படம்: அனுஷ்கா நடிப்பில் தற்போது ஹாத்தி படம் உருவாகியுள்ளது. படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் படக்குழு தரப்பில் அறிவிக்கப்படவில்லை. அனுஷ்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலும், தனது சவாலான உடல்நிலைக்கு மத்தியில் அனுஷ்கா நடித்து வருகின்றார் என்ற தகவலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X