புதுவிதமான த்ரில்லரில் உருவாகியுள்ள வனம்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இளம் நடிகர் வெற்றி.

8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி அடுத்ததாக வனம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் கோல்டன் ஸ்டார் அலெக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வனம் திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சூழலில் மிக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

8 தோட்டாக்கள் வெற்றி

8 தோட்டாக்கள் வெற்றி

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில திரைப்படங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் வெற்றி. 8 தோட்டாக்கள் என்ற அட்டகாசமான திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. முற்றிலும் புதுமுகங்கள் என்றாலும் இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 8 தோட்டாக்கள் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி நடித்த ஜீவி என்ற திரைப்படமும் மிகச் சிறந்த த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது

கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்

கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்

இவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் வனம். அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கோல்டன் ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக அலெக்ஸ் என்பவர் தயாரித்துள்ளார். கோல்டன் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் வனம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன் ஜென்மத்தை அடிப்படையாக

முன் ஜென்மத்தை அடிப்படையாக

புதுவிதமான த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முன் ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ம்ருதி வெங்கட்,அனுசித்தாரா மற்றும் வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த சூழலில் வனம் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ்

நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ்

கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் படக்குழு வனம் படத்திலிருந்து அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வனம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது

வனம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது

முற்றிலும் இருண்ட இடத்திற்கு முக்கிய ஆவணம் ஒன்றை தேடிச்செல்லும் ஹீரோ அங்கு ஒரு அறைக்குள் மாட்டிக் மாட்டிக்கொள்கிறார். கதவு திடீரென தானாக மூடியவுடன் என்ன செய்வதென்று அறியாத ஹீரோ திரும்பிப் பார்க்கையில் அவரது உருவத்திலேயே மற்றொருவர் தூக்கில் தொங்குவது போல பதைபதைக்கும் இந்த ஸ்னீக் பீக் காட்சி வெளியானதையடுத்து இன்று வெளியாக உள்ள வனம் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X