சிம்பு பிறந்தநாளில் தளபதி 67 டைட்டில் ப்ரோமோ... கோர்ட்வேர்ட் அக்செப்ட் ஆகுமா..?
சென்னை: நடிகர் சிம்பு இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் தீ தளபதி என்ற பாடலை சிம்பு பாடியிருந்தார்.
இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளன்று தளபதி 67 டைட்டில் ப்ரோமோ இன்று வெளியாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சிம்புவின் 40வது பிறந்தநாள்
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிம்பு இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வலம் வரும் சிம்பு இந்த வருடமாவது கால் காட்டு போடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக பத்து தல ரிலீஸாகவுள்ளது.

தீ தளபதி பாடிய சிம்பு
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக விஜய்யின் வாரிசு படத்தில் தீ தளபதி என்ற மாஸ் பாடலை பாடியிருந்தார் சிம்பு. தமன் இசையில் வெளியான இந்தப் பாடலை விஜய் - சிம்பு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, கடந்த சில வருடங்களாக விஜய்யுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று தளபதி 67 டைட்டில் ப்ரோமோ வெளியாவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெயின் வில்லன் சிம்பு?
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் தவிர இன்னொரு மெயின் வில்லனும் தளபதி 67ல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிக்க விஷாலுடன் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சிம்புதான் மெயின் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தரமான சம்பவம் தானா?
பத்து தல சூட்டிங் முடித்துவிட்ட சிம்பு, அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிக்காமல் சைலண்டாக இருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தளபதி 67ல் சிம்பு நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவையனைத்திற்கும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் தளபதி 67 டைட்டில் ப்ரோமோவில் விடை கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியொருவேளை தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாக சிம்பு நடித்தால் கோலிவுட்டில் இது தரமான சம்பவம் தான் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications