இது ஸ்ரீதேவியா இல்ல ஜான்வி கபூரா.. யாருக்குய்யா சிலை வச்சுருக்கீங்க? ரசிகர்கள் அதிருப்தி!
மும்பை: சிங்கப்பூர் துசாட்ஸ் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை பார்த்த ரசிகர்கள் இது அவருடைய சிலைதானா என்ற சந்தேகமடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை காட்சிக்கு வைத்துள்ளது.
ஸ்ரீதேவியின் மெழுகு சிலைதான் முதன் முதலாக வைக்கப்படும் தமிழ் பெண்ணின் சிலை என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இதற்கு முன்னதாக திரை நட்சத்திரங்கள் பலரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா நட்சத்திரங்கள்
பாலிவுட் நடிகை கஜோல், கரண் ஜோஹர், ஷாருக்கான், வருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர், கேத்ரினா கைப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீக்ஷித், சத்யராஜ் உள்ளிட்டோரின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றன.

போட்டோ
ஸ்ரீதேவியின் மெழுகு சிலை இன்று பார்வைக்கு திறக்கப்பட்டது. இதனை அவரது மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் திறந்து வைத்தார். மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்ட ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அவரது குடும்பத்தினர் பார்வையிட்டனர். பின்னர் சிலையுடன் அனைவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

ஸ்ரீதேவியின் போட்டோக்கள்
மிஸ்டர் இந்தியா படத்தில் நடித்த ஸ்ரீதேவியின் கெட்டப்பில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் சிலை குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டிவிட்டரில் ட்ரென்ட்
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த மெழுகு சிலை குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். சிலர் ஸ்ரீதேவியை நேரில் பார்ப்பது போன்று இருக்கிறது என்றும் சிலர் இது ஸ்ரீதேவி இல்லை என்றும் ஸ்ரீதேவி எப்போதும் இப்படி இருந்ததில்லை என்றும் கூறி வருகின்றனர். ஸ்ரீதேவியின் மெழுகு சிலை திறப்பால் டிவிட்டரில் #Sridevi என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
மோசமான ரசனை
எனக்கு 40 வயதாகிறது. நான் 10 வயதில் இருந்து ஸ்ரீதேவியை வணங்கி வருகிறேன், ஸ்ரீதேவி இப்படி இருந்ததே இல்லை. மோசமான ரசனை, இதை எதிர்பார்க்கவில்லை என ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை பார்த்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.
வாழ்த்துகள்
நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில். தமிழ்நாடு நடிகைக்கு வாழ்த்துகள் என கூறுகிறார் இந்த ரசிகர்.
ஸ்ரீதேவியில்லை
ஸ்ரீதேவி சிலையை என்று ஏமாற்றிவிட்டார்கள், இந்த சிலை ஸ்ரீதேவியை போல் இல்லை என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
முடியல
மெழுகு சிலையை பார்த்த ரசிகர் இதில் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அப்படி தெரியல
யார் சொன்னது இந்த மெழுகு சிலை ஸ்ரீதேவி போல் உள்ளது என்று எனக்கு அப்படி தெரியவில்லை. இது வித்தியாசமாக இருக்கிறது என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
ஜான்வி போலதான்
இந்த சிலை ஸ்ரீதேவியை விட ஜான்வி போலவே தெரிகிறது என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
உண்மையில் நிற்பது போல்
பார்க்கும் போது உண்மையிலேயே ஸ்ரீதேவி அவருடைய குடும்பத்துடன் இருப்பது போல நிற்பது போல் இருக்கிறது என்கிறார் இந்த ரசிகர்.
சாரி.. ஏற்க முடியாது
இந்த மெழுகு சிலையை பார்க்கும்போது ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. சாரி கைஸ் என்கிறார் இந்த ரசிகர்.
வித்தியாசமான மெழுகு சிலை
தங்கசிலைக்கு மெழுகு சிலை. ஸ்ரீதேவி தான் சிங்கப்பூர் மேடம் துசாட்ஸில் வித்தியாசமான மெழுகு சிலை என பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











