Leo: லியோ வெற்றி விழா.. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.. சோகத்தில் பேன்ஸ்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனும், லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யும் நடித்துள்ளனர்.

Fans are not allowed for Vijays leo movie success meet

லியோ நெகட்டிவ் விமர்சனம்: ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரமான போதும், இந்த படம் குறித்த செய்திகள், சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் : மேலும், படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்டவார்த்தை, இரண்டாம் பாதி ரொம்ப மோசம் என தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்த போதும் படம் 500க்கு மேல் வசூலாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெற்றி விழாவிற்கு அனுமதி: இந்நிலையில், லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டு பாதுகாப்பு வழங்கக் கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மனு கொடுத்திருந்தார். இந்த விழாவில், விஜய் கலந்து கொள்ள உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கவலை: லியோ வெற்றி விழாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் ரசிகர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள், மாநகர, நகர, வட்ட வார்டு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் என 6 ஆயிரம் பேர் மட்டும் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X