தனுஷுக்கும் கௌதம் மேனனுக்கும் பிரச்னையா?.. என்னை நோக்கி பாயும் தோட்டாவை அவர் இயக்கவே இல்லையா?

சென்னை: கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் கௌதம் மேனன். முக்கியமாக ஸ்டைலிஷான இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர். கடந்த சில வருடங்களாகவே அவர் படங்கள் இயக்கவில்லை; அப்படியே இயக்கினாலும் அது பெரிதாக கைகொடுக்கவில்லை. வெந்து தணிந்தது காடு படம் மட்டும்தான் நல்ல வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் தனுஷுடன் அவர் இணைந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து கௌதம் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர் மின்னலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். லவ் சப்ஜெக்ட் ஜானரில் அந்தப் படம் உருவாகியிருந்தது. படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முக்கியமாக மாதவனை சாக்லேட் பாய், ஆக்‌ஷன் ஹீரோ என்ற இரண்டு டோன்களில் காண்பித்திருந்தார் கௌதம்.

dhanush gautham menon

ஹிட் இயக்குநர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவை வைத்து காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார் அவர். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. குறிப்பாக சூர்யாவின் கரியரில் முக்கியமான படங்களில் அந்தப் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு படங்களும் வென்றதையடுத்து தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குநர் என்ற பெயரை எடுத்துவிட்டார் கௌதம். தொடர்ந்து கமலை வைத்து வேட்டையாடு விளையாடு, சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தார்.

பிரச்னைகள்: சூழல் இப்படி இருக்க கௌதமுக்கு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் படங்கள் இயக்க முடியாமல் தவித்தார். எனவே அந்தப் பிரச்னைகளை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிப்பிலும் தனது முத்திரையை பதிக்க அவர் தவறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் இயக்கிய ஜோஷ்வா இமைபோல் காக்க படம் படுதோல்வியை சந்தித்தது.

என்னை நோக்கி பாயும் தோட்டா: தற்போது மம்மூட்டியை வைத்து டாமினிக் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கினார் கௌதம். அதில் சசிக்குமாரும் நடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லாவிட்டாலும் ரிலீஸில் தாமதமானது. எனவே சில வருடங்கள் கழித்து அந்தப் படம் ரிலீஸானது. ஆனால் படம் ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகவில்லை. கண்டிப்பாக இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டவுடன் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் ஹிட்டாகியிருக்கும் என்று ரசிகர்கள் கருதினார்கள்.

கௌதம் மேனன் பேட்டி: இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், "அந்தப் படத்தின் பெயரை என்ன சொன்னீர்கள்?.. அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டுமே நான் இயக்கியதாக நினைவில் இருக்கிறது. அந்தப் படத்தை முழுவதுமாக நான் இயக்கவில்லை. வேறு யாராவது இயக்கியிருப்பார்கள்"என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கௌதம் மேனன் சொல்வதை பார்த்தல் ஒருவேளை அந்தப் படத்தின்போது தனுஷுக்கும், கௌதமுக்கும் பிரச்னை வந்ததோ; மேலும் படத்தை தனுஷே இயக்கியிருப்பாரோ அல்லது இயக்கத்தில் ஓவர் தலையீடு செய்திருப்பாரோ என்று கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X