Amaran: அமரன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கமலைக் காணோம்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?
சென்னை: தீபாவளிக்கு தமிழில் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் அமரன் படம்தான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி நடித்துள்ளார். படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 22வது படமான அமரன் படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை எடுக்கத் திட்டமிட்டபோது, வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடம், கட்டாயம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நாங்கள் மேலும் புகழை உண்டாக்குவோம் என உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆவல் ஏற்பட்டது. காரணம் சிவகார்த்திகேயன் பேமிலி ஆடியன்ஸை டார்கெட்டாகக் கொண்டு கதைகள் செய்வார். இப்படி இருக்கும்போது, அமரன் போன்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதால் படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் எளிதில் ரீச் ஆகும். இதுமட்டும் இல்லாமல் படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இசை வெளியீட்டு விழா: இந்நிலையில் அமரன் படக்குழுவினரின் அறிமுக விழா சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கமல்ஹாசன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட கமல் ஹாசன், "இந்தப் படம் நிஜம், நமக்காக நடைபெற்ற நிஜம். படத்தின் கதை என்ன இப்படி முடிந்து விட்டது என நீங்கள் கேட்கவே முடியாது. படத்தின் க்ளைமேக்ஸை முதலில் கேட்டது இவர்தான் (வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியை நோக்கி கை நீட்டுகின்றார்). அந்த தைரியம் வீட்டிலும் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

கமல்ஹாசன்: இவ்வாறு பேசிய கமல்ஹாசன் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. பொதுவாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் முக்கிய அங்கம் வகிப்பார்கள். ஆனால் கமல்ஹாசன் கலந்து கொள்ளாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரசிகர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் உண்மைக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் பலவிதமாக பேசி வருகின்றனர்.

காரணம்: ஆனால், உண்மையில் உலக நாயகன் கமல்ஹாசன் வராமல் போனதற்கு காரணம், அவர் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அதனால்தான் அவரால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதுமட்டும் இல்லாமல், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினைப் படிப்பதற்காகத்தான், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் இருந்தும் கமல்ஹாசன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











