Jailer - ரஜினினா விட்டுடுறாங்க.. விஜய்னா பிடிச்சிக்கிறாங்க ப்பா.. ஜெயிலரில் முளைத்த புது பஞ்சாயத்து

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்கும் காட்சியை வைத்து ரசிகர்கள் கேள்வி ஒன்றை எழுப்பிவருகின்றனர்.

அண்ணாத்த தர்பார் ஆகிய படங்களின் தோல்விகளால் ரஜினியும் அவரது ரசிகர்களும் நீண்ட காலமாகவே அப்செட்டில் இருந்தனர். அந்த அப்செட்டை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இளம் இயக்குனரான நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்தார். டாக்டர் படம் அருமையாக இருந்ததால் ரஜினியின் குட் புக்கில் இடம்பிடித்தார் ரஜினி. ரஜினியும் நெல்சனும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Fans are raising a question about the scene of Rajinikanth smoking a cigar in Jailer

ஜெயிலர் ரிலீஸ்: மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்கிரீன்களில் ஜெயிலர் திரையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றன. அதேபோல் உலகம் முழுவதும் நான்காயிரம் ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டிருக்கிறதாம். இதனால் படம் பல சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இன்று தியேட்டருக்கு படையெடுத்தனர்

அலப்பறை கிளப்பிய ரசிகர்கள்: தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு ஆரம்பித்த முதல் ஆரம்பித்த முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள். பாலாபிஷேகம் செய்வது மற்றும் மலர்கள் தூவுவது என அலப்பறை கிளப்பினர். மதுரையில் கைதி உடையில் ரசிகர்கள் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டிருக்கிறது

நெல்சன் ஏமாற்றவில்லை: நெல்சன் திலீப்குமார் தங்களை ஏமாற்றவில்லை என்றும் ரஜினிகாந்துக்கு தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர. குறிப்பாக இடைவேளை காட்சியும்; ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியும் மிக மிக அருமையாகவும் மாசாகவும் இருப்பதாக சிலாகித்து வருகின்றனர் .அதேபோல் நெல்சன் திலிப் குமாரின் டார்க் காமடி ரஜினிக்கு ரொம்பவே ஒத்துப் போயிருக்கிறது அதனை ரஜினிகாந்த் அலட்டல் இல்லாமல் செய்திருக்கிறார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Fans are raising a question about the scene of Rajinikanth smoking a cigar in Jailer

நெகட்டிவ் விமர்சனங்கள்: படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களும் சில எட்டிப் பார்க்கின்றன. அவைகளை விஜய் ரசிகர்கள்தான் திட்டமிட்டு பரப்புவதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். சூழல் இப்படி இருக்க தற்போது படத்தைப் பார்த்தவர்கள் சிலர் புது பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

என்ன பஞ்சாயத்து: அதாவது விநாயகனிடம் ரஜினிகாந்த் பேசும் ஒரு காட்சியில் சுருட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு பொதுவெளியில் பெரிதாக எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை. அதே சமயம் லியோ படத்தில் நான் ரெடிதான் பாடலில் வாயில் சிகரெட்டை வைத்திருந்த விஜய்க்கு எதிராக பலரும் கொந்தளித்தனர். எனில் ரஜினி பிடித்தால் கண்டு கொள்ளாதவர்கள் விஜய்யை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? எனவே விஜய்யின் வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X