வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா?.. ஒரே ரூமில் இருக்கும் புகைப்படங்கள்?.. புதுசு புதுசா கிளம்புது
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக முழுதாக அரசியலில் இறங்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க விஜய் குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் புகைப்படங்கள் விவாத பொருளாகியிருக்கின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்தப் படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. லியோவில் விமர்சன ரீதியாக அடிவாங்கியதற்கு இந்தப் படத்தின் மூலம் மருந்திட்டுக்கொள்ளும் முடிவில் விஜய். படமும் தரமாக வந்திருக்கிறது என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சிறப்பு தோற்றத்தில் திரிஷா: இதற்கிடையே கோட் படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் அனுஷ்காவிடம் நடனம் ஆட கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதால்; விஜய்யே நேரடியாக தலையிட்டு திரிஷாவிடம் பேசி நடனம் ஆட சம்மதம் வாங்கியதாகவும் திரைத்துறையில் பலமாகவே குரல்கள் கேட்கின்றன. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
புகைப்படத்தால் வந்த வினை: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு; லிஃப்ட்டில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் விஜய்யும் திரிஷாவும் தனியாக எங்கோ சென்றிருக்கிறார்கள் என்று பேச தொடங்கினார்கள். ஆனால் அது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும்; அதை வேறு ஒருவர்தான் எடுத்தார் என்றும் மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

அலுவலகம் பக்கத்திலேயே வீடு?: அதுமட்டுமின்றி இன்னொரு வதந்தியும் பரவியது. அதாவது ஆரியபுரத்தில் விஜய் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அலுவலகத்தை வாங்கியிருப்பதாகவும்; அந்த அப்பார்ட்மெண்ட்டிலேயே திரிஷாவும் 17 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும்; அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் லிஃப்ட்டில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜய் - திரிஷா குறித்த வதந்திக்கு இந்த விஷயம் மேலும் தீனி போடுவதாக இருந்தது.
பரவும் புகைப்படங்கள்: இப்படி நாளொரு கதையாக இருவர் குறித்தும் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்கள் இரண்டு உலா வர ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அறை ஒன்றில் ஒரே மெத்தையில் ராதிகா, திரிஷா, சங்கீதா, ராஷ்மிகா மந்தனா ஆகிய நான்கு பேரும் கத்தும்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் ராதிகா பச்சை நிற உடையை அணிந்திருக்கிறார்.
ஒரே ரூமில்: அடுத்த புகைப்படத்தில் அதே பச்சை உடையில் அதே ரூம் அட்மாஸ்பியரில் விஜய்யுடன் இருக்கிறார் ராதிகா. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர், விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனாவும், சங்கீதாவும் நடித்த படம் வாரிசு. இந்தப் புகைப்படங்களையும், ராதிகாவின் ஒரே நிற உடையையும் வைத்து பார்க்கையில், 'ஒருவேளை வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரிஷாவும் சென்றிருந்தாரோ?.. அப்படி சென்றிருந்தால் ஏன் அவர் அங்கு செல்ல வேண்டும்' என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு புதுசு புதுசா கிளம்புதே என்று சொல்லி சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படங்களை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











