Vijay - ஓடி வந்து உதவிய விஜயகாந்த்.. நன்றிக்கடனை செலுத்துவாரா விஜய்?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Vijay (விஜய்) விஜயகாந்த் தனக்கு உதவி செய்ததுபோல் விஜய் தற்போது ஒரு உதவியை செய்வாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் அனைத்துமே அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துவருவதாக கூறப்படுகிறது. இப்போது அவர் நடித்து முடித்திருக்கும் லியோ படம்கூட ப்ரீ பிஸ்னெஸ்ஸாக 400 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்திருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படத்துக்கு 175 கோடி ரூபாய் சம்பளம் என்றும் பேசப்படுகிறது.

தடுமாற்றமும், விமர்சனமும்: படம் மட்டுமின்றி மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்டங்களையும் செய்துவருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கூறப்படுகிறது. இப்படி விஜய் இப்போது தவிர்க்க முடியாத நபராக சினிமாவிலும், தமிழ்நாட்டிலும் திகழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் தனது ஆரம்பகாலக்கட்டத்தில் ரொம்பவே தடுமாறி விமர்சனங்களை சந்தித்தார்.
தந்தை துணை: குறிப்பாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணையுடன்தான் அவர் சினிமாவில் அறிமுகமாகி ஆரம்பகாலத்தில் பயணித்தார். அப்போது அவரை நோக்கி கடுமையான விமர்சன அம்புகள் ஏவப்பட்டன. முக்கியமாக உருவ கேலியையும் சந்தித்தார் விஜய். இருந்தாலும் அனைத்துக்கும் அமைதியாக இருந்த விஜய் திறமையின் துணையோடும் எஸ்.ஏ.சி தவிர்த்து இன்னொருவரின் உதவியுடன் அடையாளப்பட்டார்.
விஜயகாந்த்: அந்த நபர் வேறு யாருமில்லை விஜயகாந்த்தான். எஸ்.ஏ.சியும், விஜயகாந்த்தும் நெருக்கமானவர்கள். இரண்டு பேரும் சேர்ந்து 17 படங்களில் வேலை செய்திருக்கின்றனர். எனவே விஜய்யை விஜயகாந்த்துடன் நடிக்க வைத்தால் பிரபல்யம் கிடைக்கும் என்று திட்டமிட்ட சந்திரசேகர் செந்தூரப்பாண்டி படத்தை இயக்கினார். எப்போதும் உதவுவதற்கு தயாராக இருக்கும் விஜயகாந்த் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நடித்து விஜய்யின் பிரபல்யத்திற்கு உதவினார்.
விஜய்யே ஒத்துக்கொண்ட உண்மை: இதை விஜய்யே ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஒரு பேட்டியில் பேசிய அவர், "விஜயகாந்த் சார் பீக்கில் இருக்கும்போது அவருடன் நடித்தால் நானும் பிரபலம் ஆவேன் என்று திட்டமிட்டுத்தான் செந்தூரப்பாண்டி படத்தை இயக்கினார் அப்பா. அதேபோல் செந்தூரப்பாண்டி படத்தை விஜயகாந்த்துக்காக பார்க்க வந்த ரசிகர்களிடம் நானும் அடையாளப்பட்டேன்" என தெரிவித்திருந்தார்.

உதவுவாரா விஜய்: ஆனால் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இப்போது ஓய்வில் இருக்கிறார். விஜய்யோ அவரை நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் படைவீரன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். விஜயகாந்த் போல் தானும் சினிமாவில் வென்று அந்த பாரம்பரியத்தை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சண்முகப்பாண்டியன்.
எனவே தன்னுடைய ஆரம்பகாலத்தில் எப்படி விஜயகாந்த் தனக்கு உதவினாரோ அதேபோல் விஜய் விஜயகாந்த்தின் மகனுக்கு உதவ வேண்டும். சண்முகப்பாண்டியன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும்; அப்படி நடிக்க முடியாத பட்சத்தில் தன்னுடைய படத்திலாவது அவருக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும். அப்படி செய்து விஜயகாந்த்துக்கு பட்டிருக்கும் நன்றிக்கடனை விஜய் அடைப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். செய்வாரா விஜய்..


Click it and Unblock the Notifications











