twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் ரெடி, இயக்குனர்களே நீங்க ரெடியா?: இன்ட்ரஸ்டிங் 2018

    By Siva
    |

    சென்னை: படங்களை சூப்பர் ஹிட்டாக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு படம் எடுக்க இயக்குனர்கள் தயாரா?

    2017ம் ஆண்டில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதே சமயம் பெரிய நடிகர்களின் படங்கள் பப்படமும் ஆகியுள்ளது.
    2018ம் ஆண்டிலும் படங்களை ஹிட்டாக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் அவர்களின் விருப்பத்தை இயக்குனர்கள் புரிந்து கொண்டு படம் எடுப்பது நல்லது.

    இந்த ஆண்டு இயக்குனர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுகளில் சில இதோ.

    நயன்தாரா

    நயன்தாரா

    கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் படம் சூப்பர் ஹிட்டானது. படம் ஹிட்டானதற்கு நல்ல கதை தான் காரணம். சமூக அக்கறை கொண்ட படங்களை வரவேற்க ரசிகர்கள் தயாராக இருப்பதையே இந்த படத்தின் வெற்றி தெரியப்படுத்தியுள்ளது.

    உதாரணம்

    உதாரணம்

    புதுமுக இயக்குனர், புதுமுக நடிகையுடன் வெளியான அருவி படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது போன்ற சமூக அக்கறை உள்ள படங்களில் யார் நடித்தாலும் ஹிட் தான் என்பதை இயக்குனர்கள் உணர்ந்துள்ளனர்.

    மொக்கை

    மொக்கை

    பெரிய நடிகர்கள் மாஸ் காட்டி நடித்த படங்கள் வெளியாகின. அவை ஹிட் என்று வெளியே சொன்னாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தான். அதனால் எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் நல்ல கதை இல்லை என்றால் படம் பப்படம் என்பதை ரசிகர்கள் இயக்குனர்களுக்கு புரிய வைத்துள்ளனர்.

    கார்த்தி

    கார்த்தி

    தீரன் அதிகாரம் ஒன்றில் உண்மை சம்பவத்தை அழகாக படமாக்கியிருந்தனர். தேவையில்லாத பில்ட்அப் இல்லாததால் படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்கினார்கள்.

    சந்தீப் கிஷன்

    சந்தீப் கிஷன்

    ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி நடித்த மாநகரம் ஹிட்டானதற்கு முக்கிய காரணமே திரைக்கதை தான். ஒரு சீரியஸான படத்தில் காமெடி எங்கு வைக்க வேண்டும் என்பதற்கு இந்த படமே சிறந்த உதாரணம். குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக லாபம் ஈட்டினார்கள்.

    வசந்த் ரவி

    வசந்த் ரவி

    இளைஞர்களை குறி வைத்து வெளியான தரமணி படம் ஹிட்டானது. ட்ரெய்லரை பார்த்து முகம் சுளித்தவர்கள் கூட படம் வெளியான பிறகு தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

    சித்தார்த்

    சித்தார்த்

    நல்ல பேய் படம் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு செமத்தியான விருந்தாக அமைந்த படம் அவள். பேய் படத்தை எப்படி எடுத்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று புரிந்து கொண்டு எடுத்துள்ளனர்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தது. இப்படியும் கதை சொல்லலாம் என்று புஷ்கர், காயத்ரி செய்து காட்டியுள்ளனர்.

    கவுதம் கார்த்திக்

    கவுதம் கார்த்திக்

    வித்தியாசமான திரைக்கதை மட்டும் அல்ல இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் அதிகம் உள்ள அடல்ட் காமெடி படத்தையும் பார்த்து சூப்பர் ஹிட்டாக்குவோம் என்று ரசிகர்கள் நிரூபித்த படம் ஹரஹர மகாதேவகி. ரூ. 3 கோடியில் படம் எடுத்து ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளனர்.

    படங்கள்

    படங்கள்

    புதுமையை வரவேற்க நாங்க ரெடி என்று சினிமா பிரியர்கள் காண்பித்துவிட்டார்கள். அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு வித்தியாசமான படங்களை 2018ம் ஆண்டில் அளிக்க இயக்குனர் ரெடியா?

    English summary
    Cinema lovers have proved in 2017 that they are ready to make any movie a hit if the story is different and inspiring. Are the film makers listening? If the directors are ready to satisfy the audience, then 2018 will be a very fruitful year for the tamil cinema. All the best everyone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X