Leo - இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிட்டாரே.. லோகேஷ் கனகராஜுக்கு பெரிய மனசுதான்.. கலாய்க்கும் ரசிகர்கள்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) பிரபல இயக்குநரின் ஆசையை லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் நிறைவேற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கம் என்பதாலும் விஜய்யின் நடிப்பு என்பதாலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர். படமானது விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. ஆனால் பொதுவான ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது.

Fans are saying that Lokesh Kanagaraj has fulfilled the directors wish in the movie Leo

மல்டி ஸ்டாரர்: இந்தப் படமானது மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கிறது. விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யாப், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருந்தது. இத்தனை பேரை லோகேஷ் எப்படி வேலை வாங்கியிருப்பார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

ஸ்க்ரீன் ஸ்பேஸ்: இத்தனை பேரை வேலை வாங்குவது என்பது கடினமான வேலை என்றால் அவர்களுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுப்பது அதைவிட கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை லோகேஷ் கனகராஜ் லாவகமாகவே செய்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களுக்கு அதிகம் கொடுத்துவிட்டு மற்ற கதாபாத்திரங்களை சிறிது நேரம் உலாவ விட்டிருக்கிறார்.

அனுராக் காஷ்யாப்: அப்படித்தான் அனுராக் காஷ்யாப்பும். படத்தில் சில நொடிகளே வரும் அனுராக் காஷ்யாப் விஜய்யின் நண்பராக தோன்றுகிறார். ஆனால் விஜய்யோ ஒரு விஷயத்துக்காக யோசிக்காமல் அனுராக்கை கொன்றுவிடுவார். அவ்வளவுதான் அனுராக்கின் ஸ்க்ரீன் ஸ்பேஸ் லியோ திரைப்படத்தில். இதை பார்த்து ஒரு சிலர் ஆச்சரியப்பட்டாலும் பெரும்பாலும் ஆச்சரியப்படவில்லை என்பதுதான் உண்மை.

அவரின் ஆசைதான்: அதாவது சில மாதங்களுக்கு முன்பு அனுராக் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் ஒரு சீன் வந்து அந்த சீனில் இறந்துபோனாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அதேமாதிரி லியோவில் ஒரு சீன் வந்து இறந்து போயிருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த இயக்குநரின் ஆசையை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றிட்டாரே ப்பா. உண்மையில் அவருக்கு பெரிய மனசுதான்.. ஆனால் அனுராக் ஏன் இதுல வரணும் என கலாய்த்துவருகின்றனர்.

லியோ வசூல்: லியோ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் முதல் நாளில் 140 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வசூல் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலைவிட அதிகம் என்றும் ஒரு தகவல் உலாவுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X