Leo Second Single -பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி..லியோ செகண்ட் சிங்கிளில் விஜய்யின் பதிலடி யாருக்கு?
சென்னை: Leo Second Single (லியோ செகண்ட் சிங்கிள்) லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியான சூழலில் இந்தப் பாடலின் மூலம் விஜய் சிலருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது இப்போது லியோதான். படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன. கடந்த வாரத்தில் படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகின.

ஆடியோ லான்ச் ரத்து: நிலைமை இப்படி இருக்க செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோவின் ஆடியோ லான்ச் நடப்பதாக இருந்தது. பாஸ்கள் வழங்கப்பட்டு மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கின. ஆனால் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என குறிப்பிட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அரசியல் அழுத்தமா?: நிகழ்ச்சி நடத்தப்படாததற்கு படத்தயாரிப்பு நிறுவனம் சில காரணங்களை கூறினாலும் கண்டிப்பாக இதன் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கும் என பலரும் கூறினர். இந்த சூழலில் படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று வெளியானது. Bad Ass என்று தொடங்கும் அந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார்.
கவனம் ஈர்த்த வரிகள்: இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளான, பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி, இதுவரையில் நல்லவன் இருந்தான் இந்த கதையில ராட்சசன் முகம்தான், பல ராஜாக்கள பார்த்தாச்சு டா இவன் கத்தி ரொம்ப கூராச்சு டா, நூறு பஞ்சாயத்த தீர்த்தாச்சு டா போன்ற வரிகளை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
யாருக்கு பதிலடி: பாடலின் வரிகளை அடிகோடிடும் ரசிகர்கள் பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வரி மூலம் ரஜினிக்கு விஜய் பதிலடி கொடுத்து அவருக்கு முற்றுப்புள்ளி எழுதியாயிற்று என்று மறைமுகமாக உணர்த்துகிறார் என கூறுகின்றனர். அதேபோல் பல ராஜாக்கள பார்த்தாச்சு டா, நூறு பஞ்சாயத்த தீர்த்தாச்சு டா என்ற வரியை கேட்கும்போது இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களிடமிருந்து விஜய் ஏகப்பட்ட அரசியல் அழுத்தங்களையும், பஞ்சாயத்துக்களையும் சந்தித்திருக்கிறார்.
எனவே தற்போது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கும் அரசியல் அழுத்தம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க; ஏற்கனவே ஆட்சி செய்த ராஜாக்களையும் அவர்கள் மூலம் வந்த பஞ்சாயத்துக்களையும் தீர்த்திருக்கிறேன் என தற்போது அரசியல் அழுத்தம் கொடுப்பவர்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ்களை செய்துவருகின்றனர்.
குட்டி கதை?: குறிப்பாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்து ரஜினிகாந்த் குட்டி கதை சொன்னார். அதுமட்டுமின்றி ஹுக்கும் பாடல் வரிகள் விஜய்யை தாக்குவது போல் இருந்தன. அதற்கு விஜய் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
இருந்தாலும் விழா நடக்காததால் இந்தப் பாடலின் வரிகள் மூலம் ரஜினிக்கும் இன்னும் சிலருக்கும் தளபதி ஒரு குட்டி கதையையே சொல்லிவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் தீவிரமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதனால் மீண்டும் ரஜினி vs விஜய் பஞ்சாயத்து ஆரம்பிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











