Vijay - அம்மா ஓகே அப்பா எங்கே விஜய்?.. ரசிகர்கள் எழுப்பும் கேள்வி - ஆரம்பித்தது புதிய பஞ்சாயத்து
சென்னை: Vijay (விஜய்) விஜய் தனது தாய் ஷோபாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது, இப்போது ரசிகர்கள் புதிதாக ஒரு கேள்வியை எழுப்பிவருகின்றனர்.
விஜய்க்கென்று கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

தாய் தந்தையுடன் கருத்து வேறுபாடு: இதற்கிடையே விஜய் அவரது தாய் மற்றும் தந்தையுடன் பேசுவதே இல்லை எனவும், அவர்களை சந்தித்தே பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் தகவல் ஒன்று தீயாக பரவியது. அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்பு ந்டந்த எஸ்.ஏ.சி பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் விஜய் கலந்துகொள்ளாதது மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியது.
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா: இப்படிப்பட்ட சூழலில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்த விஜய் அனைவருக்கும் கை கொடுத்தும், அவர்களை கட்டி அணைத்தபடியும் சென்றார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரையோ, ஷோபாவையோ அவர் பெரிதாக மதிக்கவில்லை. அலட்சியம் செய்துவிட்டார் என்றும் அப்போது சர்ச்சை எழுந்தது.
தாய் மறுப்பு: ஆனால் அந்த விழா ரசிகர்களுக்காக நடத்தப்பட்டது. அதில் எங்களை அவர் கவனிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அப்படி நாங்கள் எதிர்பார்க்கவும் மாட்டோம் என ஷோபா விளக்கமளித்திருந்தார். அதுமட்டுமின்றி வாரிசு படத்தை நான், விஜய், எனது கணவர் உள்ளிட்டோர் இணைந்துதான் பார்ப்போம். எங்களுக்குள் மோதல் என்பதில் உண்மையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
தாயுடன் ஃபோட்டோ: இந்நிலையில் தாய் ஷோபாவுடன் விஜய் சமீபத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ட்ரெண்டானது. எஸ்.ஏ.சி மற்றும் ஷோபாவின் 50ஆவது திருமண நாளை முன்னிட்டு விஜய் அவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் விஜய் தனது பெற்றோர்களுடன் சமாதானமாகிவிட்டார் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துவந்தனர்.

அப்பா எங்கே விஜய்: ஆனால் இப்போது ரசிகர்களில் ஒருதரப்பினர் புதிய பஞ்சாயத்தை ஆரம்பித்துவைத்திருக்கின்றனர். அதாவது, அவர் எடுத்த புகைப்படத்தில் தாய் ஷோபா மட்டும்தான் இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரை இப்போதும் அவர் ஒதுக்கிவிட்டார். தாயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் தந்தையுடனும் ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க வேண்டியதுதானே என கூறிவருகின்றனர்.
அரசியல் ஆசையால்தான் இதுவா?: அதுமட்டுமின்றி விஜய்யின் சமீபத்திய மூவ்களை எல்லாம் பார்க்கும்போது அவருக்கு அரசியல் ஆசை மீண்டும் துளிர்விட்டதாகவே கருதப்படுகிறது. எனில் பொது வாழ்க்கைக்கு வந்தால் தனது மேல் இருக்கும் சில முத்திரைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோருடன் இணக்கமாக செல்வதுபோல் காட்டிக்கொள்கிறார் என்ற கருத்தையும் சிலர் கூறுகின்றனர்.
மேலும், தாயை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு தனது தந்தையை தொடர்ந்து ஒதுக்குவதன் மூலம் விஜய்க்கும் - எஸ்.ஏ.சிக்கும் இடையேயான பஞ்சாயத்து இன்னும் தீரவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











